அதிசார குரு பெயர்ச்சி 2025 - மிதுன ராசி
பணம் சம்பாதிப்பது தானே முக்கியம் என்று நினைத்து ஓடிக்கொண்டிருக்கும் அன்பர்களே உங்களுக்கும் சொல்லுகிறேன் நல்லபடியாக வியாபாரம் நடக்கும்...

அதிசாரம் என்றால் முன்னோக்கி (or) மிக வேகமாக நகர்வது என்று பொருள்... குறிப்பாக கிரகங்களுக்கு மூன்று விதமான பயணங்கள் உண்டு அது பூமியிலிருந்து நம் பார்க்கும் பார்வையை பொறுத்தது... கிரகங்கள் சீரான வேகத்தில் அவரது நேர்கோட்டில் நகர்ந்து கொண்டு இருப்பார்கள்... பூமியிலிருந்து ஒரு கிரகம் எப்படி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை வைத்துத்தான் தற்பொழுது நான் கிரகங்களின் நகர்வை பற்றி சிறிதாக சொல்கிறேன்...
குரு தற்பொழுது மிதுன ராசியில் பயணித்துக் கொண்டிருக்கிறார்... அது சீரான பயணம்... ஆனால் அந்த குருவே சூரியனுக்கு ஒரு குறிப்பிட்ட கால அளவில் வரும் பொழுது பின்னோக்கி பயணிப்பது போல் தெரியும்...அதை நாம் ’வக்கிரம்’ என்று கூறுகிறோம்... இதே போல தான் குரு மிக வேகமாக முன்னோக்கி நகர்ந்து... மிதுன ராசியில் தென்படும் குருபகவான் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி கடக ராசிக்கு செல்வது போல தெரியப்போகிறது... உண்மையிலேயே அவர் கடக ராசியில் தான் பிரவேசிக்கப் போகிறார்... இப்படி உச்சம் என்ற நிலைக்கு குருபகவான் போகும்பொழுது உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுப்பார் என்ற உண்மையான விவரங்களை தற்போது தெரிந்து கொள்வோம்...
அதிசார குரு பெயர்ச்சி 2025 மிதுன ராசி
அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசியிலேயே குரு பகவான் அமர்ந்து தொழில் ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் ஒரு வழிகாட்டியாக திகழ்ந்திருக்கிறார்... இந்த சமயத்தில் குரு அதிசாரமாக கடக ராசிக்குள் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி நுழைகிறார்... பத்தாம் அதிபதி இரண்டாம் வீட்டில் இருப்பது நிச்சயம் தொழில் ரீதியாக பணம் வந்தே தீரும்... நீண்ட நாட்களாக வருமானமே இல்லாதவர்களுக்கு கூட தற்பொழுது தொழில் மூலமாக வருமானம் ஏற்படும்.... இவ்வளவு ஏன் பிறந்த ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் கேது இருப்பவர்களுக்கு கூட தற்பொழுது அதிசார குருவால் நன்மை கிடைக்கப் போகிறது... 30 வயதை கடந்தும் திருமணமாகாமல் இருக்கின்ற மிதுன ராசி அன்பர்களுக்கு இது ஜாக்பாட் டைம்... குடும்பத்துடன் நேரமே செலவழிக்க முடியவில்லை ஒரே வேலையாக இருக்கிறது என்று இருப்பவர்களுக்கு கூட தற்பொழுது இந்த குருவின் அதிசார பயிற்சியால் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்பது போல ஒற்றுமையுடன் உற்றார் உறவினர்கள் சொந்த பந்தங்களுடன் நேரத்தை செலவழிப்பீர்கள்...
கச்சிதமாக சொல்ல வேண்டுமென்றால் அக்டோபர் 18ல் இருந்து டிசம்பர் முதல் வாரம் வரை நீங்கள் மனதில் நினைத்து வைத்திருந்த அத்தனை அபிலாசைகளும் பூர்த்தியாக கூடிய நேரம் என்று சொல்லலாம் அல்லது பூர்த்தியாவதற்கான வழிகளை காட்டும் நேரம் என்றும் சொல்லலாம்... ஒரே சண்டை சச்சரவு வாழ்க்கை துணை உடன் என்ன செய்வது என்று தெரியவில்லை என்பது போல நீங்கள் அமர்ந்திருக்கிறீர்களா இதோ குருவானவர் இரண்டில் அமர்ந்து குடும்பம் தான் முக்கியம் பிரச்சனைக்கு செல்லக்கூடாது அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை உங்களுக்குள்ளேயே கொடுத்து நல்வழிப்படுத்தப் போகிறார்.... பார்ப்பவர்களுக்கு கூட திருஷ்டி சுத்தி போடும் அளவிற்கு உங்கள் குடும்பத்தின் வைப்ரேஷன் பயங்கரமாக இருக்கும்...
பணம் சம்பாதிப்பது தானே முக்கியம் என்று நினைத்து ஓடிக்கொண்டிருக்கும் அன்பர்களே உங்களுக்கும் சொல்லுகிறேன் நல்லபடியாக வியாபாரம் நடக்க என்ன செய்ய வேண்டுமோ அதற்கான வழிகாட்டி உங்களிடம் வரப் போகிறார் பொருளாதார அடிப்படையில் முன்னேற்றம் ஏற்படும் பொழுது அதே சமயத்தில் உடல் ரீதியான நல்ல மாற்றங்களும் கூட நிகழும் வாழ்க்கை துணை வகையில் சிறு உடல் உபாதைகளோ அல்லது திடீர் மருத்துவ செலவுகள் கூட ஏற்படும் ஆனால் அப்படி ஒன்றும் அது உங்களை பாதிக்காது... குழந்தை பிறப்பு தற்போது நடக்க வாய்ப்புண்டு அப்படி நடந்தால் குடும்பம் ஒற்றுமையாக ஒன்று சேர மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வீர்கள்... உங்களிடம் இருக்கும் குறைகளை சிலர் சுட்டிக் காட்டலாம்... அதை மனதில் உள்வாங்கிக் கொண்டு நல்லபடியாக வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லுங்கள்... உபய ராசிகளில் ஒருவரான மிதுன ராசிக்கு குரு பெயர்ச்சியின் அன்பும் ஆதரவும் நல்லபடியாக அமையும்... ஓம் ஸ்ரீ குருவே நமஹ என்று 108 முறை சொல்லுங்கள் பிரச்சனைகள் விலகும்.....




















