மேலும் அறிய

குறி பார்க்க வந்த இடத்தில் ஆசை வார்த்தை !! மறுப்பு தெரிவித்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு

குறி பார்க்க வந்த இடத்தில் ஆசைக்கு இணங்க மறுத்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கோடாங்கி கைது

குடும்ப பிரச்சனைக்காக குறி கேட்க சென்ற பெண்

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே பாளையம் பட்டி பகுதியில் வசித்து வருபவர் தூய்மை பணியாளரான 42 வயதுடைய சாந்தி. இவரது கணவர் பாண்டியராஜ் என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் 17 வயதுடைய மகன் சந்தீப் குமார் மற்றும் 13 வயதுடைய மகள் யாழினி ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் பாண்டியராஜின் அக்காவான 45 வயதுடைய ஸ்ரீதேவி என்பவரின் கணவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்து விடவே அவரும் பாளையம்பட்டியில் உள்ள அருந்ததியர் காலனி வீட்டில் வசித்து வரும் சாந்தியுடன் உடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சாந்தி என்பவர் தனது குடும்பத்திற்கு குறி பார்ப்பதற்காக காரியாபட்டி அருகே உள்ள கள்ளக் குறிச்சி மணி நகரைச் சேர்ந்த கோடாங்கி முத்து என்பவரிடம் சென்றுள்ளார்.

பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

குடும்ப வறுமை தீர சில பரிகாரம் செய்ய வேண்டும் என பாளையம்பட்டியில் உள்ள சாந்தியின் வீட்டிற்கு கோடாங்கி முத்து என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்து குறி பார்த்து பரிகாரம் செய்து விட்டு சென்றுள்ளார்.

பின்னர் கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வரும் சாந்தியிடம் அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக கூறியுள்ளார். இதற்கு சாந்தி இணங்க மறுத்ததால் பலமுறை தொலைபேசியில் பேசி தனது ஆசைக்கு இணங்க வேண்டுமென வற்புறுத்தி வந்த நிலையில் சாந்தி அதற்கு இணங்க தொடர்ந்து மறுத்ததால் ஆத்திரமடைந்த கோடாங்கி முத்து , கதவை பூட்டாமல் தூங்கிக் கொண்டிருந்த சாந்தி மற்றும் ஸ்ரீதேவி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

இதனை தொடர்ந்து சாந்தி மற்றும் ஸ்ரீதேவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் தீக்காயம் அடைந்த சாந்தி மற்றும் ஸ்ரீ தேவியை மீட்டு அவசர சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த சந்தீப் குமார் மற்றும் யாழினி ஆகியோர் தீ காயங்களின்றி உயிர் தப்பினர். தீக்காயுடன் மீட்கப்பட்ட சாந்தி மற்றும் ஸ்ரீ தேவி இருவருக்கும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் விருதுநகரில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தீக்காயம் அடைந்த சாந்தி மற்றும் ஸ்ரீதேவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சாந்தி என்பவர் தான் கணவர் இல்லாமல் தனியாக வசித்து வருவதை பயன்படுத்தி தன் வீட்டிற்கு குறி பார்க்க வந்த முத்து என்பவர் தன்னை தொலைபேசியிலும் நேரடியாகவும் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு வற்புறுத்தி வந்ததாகவும் , அதற்கு முடியாது என்று கூறிய நிலையில் அவர் செயலை செய்திருக்கலாம் என்று அளித்த தகவல் அடிப்படையில் கோடங்கி முத்துவை அருப்புக்கோட்டை நகர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்
ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஆன்மீக ‘பூஸ்ட்’...! ஆரோவில்லில் நடந்த மாஸ் கிளாஸ்
ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஆன்மீக ‘பூஸ்ட்’...! ஆரோவில்லில் நடந்த மாஸ் கிளாஸ்
"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget