மேலும் அறிய

Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

அண்டை மாநில நதி நீர் பிரச்சினையில் அரசியல் லாபம் கருதி வெற்று அறிக்கைகளையும் போராட்டங்களையும் அறிவிப்பதா?- அமைச்சர் துரைமுருகன்

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பு செய்துள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''முல்லைப் பெரியாறு அணை மற்றும் பேபி அணை பலப்படுத்திய பின் அணையின் நீர் மட்டத்தை 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் 27.02.2006 அன்று ஆணையிட்டது.

152 அடியாக உயர்த்த தொடர் நடவடிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், தமிழ்நாடு அரசு முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

முதலமைச்சர் 17.06.2021– இல் பிரதமருக்கு அளித்த கோரிக்கை மனுவில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்து கேரள அரசு ஒத்துழைக்க அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து நானும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து 06.07.2021 அன்று அளித்த கோரிக்கை மனுவில், அணையை பலப்படுத்த கேரள அரசிற்கு உத்தரவு வழங்குமாறு கேட்டுக் கொண்டதுடன், தலைமைச் செயலாளர், மற்றும் நீர்வளத் துறை  கூடுதல் தலைமைச் செயலாளரும் சம்மந்தப்பட்ட கேரள அரசின் அதிகாரிகளுடன் தொடர்ந்து, இது குறித்து கடிதம் மற்றும் பல வழக்குகளின் மூலம் நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளனர்.

இதற்கிடையே, தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் (I.A. 28 of 2017) இது தொடர்பாக ஒரு கூடுதல் மனுவை தமிழ்நாடு அரசு 27.11.2021 அன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலும், 14.11.2022 மற்றும் 07.08.2023 தேதிகளில் இடைக்கால மனுக்களையும் தாக்கல் செய்துள்ளது.

03.03.2022 அன்று நான் கேரள நீர்வளத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், பேபி அணை அருகே உள்ள மரங்களை அகற்ற விரைவில் அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

தொடர் விவாதம்

முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வைக் குழுவின் அறிவுரையின்படி 12.12.2022 மற்றும் 05.05.2023 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரு மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டத்திலும் இந்த பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.

05.05.2023 அன்று நடந்த கூட்டத்தை தொடர்ந்து, கேரள அரசு வல்லக்கடவு முல்லைப் பெரியாறு அணை வனச்சாலையை சரிசெய்வதற்கு ரூபாய் 31.24 இலட்சத்திற்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, 04.10.2023 அன்று தமிழ்நாடு அரசு, கேரள அரசிற்கு இத்தொகையை செலுத்தியது. தரைப்பாலம் சீரமைக்கும் பணி 09.02.2024 அன்று தொடங்கப்பட்டு 09.05.2024 அன்று முடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தமிழ்நாடு அரசு, கேரள அரசுக்கு கடிதங்களின் வாயிலாகவும், மேற்பார்வை குழு கூட்டங்களின் வாயிலாகவும், பேபி அணையின் எஞ்சிய பணிகளை முடிக்க தேவையான அனுமதி அளிக்க வலியுறுத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க நடவடிக்கை

மீதமுள்ள பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு, அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்துவதன் மூலம், தமிழ்நாட்டின் உரிமை மற்றும் முல்லைப் பெரியாறு அணை பாசன விவசாயிகளின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான கழக அரசு தமிழ் மொழி மற்றும் மாநில உரிமைகளுக்காக எப்போதும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. அண்டை மாநில நதி நீர் பிரச்சினையில் அரசியல் லாபம் கருதி வெற்று அறிக்கைகளையும் போராட்டங்களையும் அறிவிக்கும் அ.இ.அ.தி.மு.க. மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்''.

இவ்வாறு அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Embed widget