TN BJP Protest: கர்நாடக பாஜகவுக்கு எதிராக தஞ்சையில் தடையை மீறி உண்ணாவிரத்தை தொடங்கிய அண்ணாமலை
தஞ்சையில் பாஜக அறிவித்த உண்ணாவிரத போரட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில் தடையை மீறி அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதம் நடந்து வருகிறது
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும், கர்நாடக அரசின் முயற்சியை கைவிட கோரி தஞ்சாவூரில் உண்ணாவிரத போராட்டத்தை பாஜக ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் இப்போரட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி பா.ஜ.க சார்பில் தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகே தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில், உண்ணாவிரதம் நடந்து வருகிறது. முன்னதாக உண்ணாவிரதம் துவங்கும் முன்னர், ராஜராஜ சோழன் சிலையில் இருந்து அண்ணாமலை தலைமையில் மாட்டு வண்டியில் பாஜகவினர் ஊர்வலமாக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.
போராட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசியசெயலாளர் ஹெச்.ராஜா, மாநில துணை தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான நயினார் ராகேந்திரன், மாநில விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், மாநில விவசாய அணி பார்வையாளர் கருப்பு எம்.முருகானந்தம், தஞ்சை மாவட்ட தலைவர் ஆர்.இளங்கோ, முன்னாள் எம்.பி.க்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கார்வேந்தன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் போல் வேடமிட்டு வந்த சிறுவர்களுக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எழுந்து நின்று இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தார். முன்னதாக பாஜக சார்பில் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டபோது, செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி.தயாநிதி மாறன், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசிடம் பேசுவதற்காக மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம் என பேசினார். அதற்கு பதிலளித்திருந்த அண்ணாமலை
[tw]
Unlike Mr. Dayanidhi Maran who watchesT20 matches in the middle of a pandemic, I’m always ready for our farmers.
— K.Annamalai (@annamalai_k) July 31, 2021
Also request him to kindly loan his family’s personal jet so that my simple & humble farmer friends can reach faster.
Will his uncle Thiru @mkstalin agree to this! https://t.co/T3P6TNmsqx
[/tw