மேலும் அறிய

இவர்களின் சிக்கலுக்கு தீர்வு எப்போது ? மத்திய அரசு என்ன செய்ய போகிறது - கொந்தளிக்கும் அன்புமணி

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மீனவர்கள் எப்போதும் தங்கள் நாட்டு சிறைகளில் அடைபட்டு கிடக்க வேண்டும்  என்று நினைக்கும் இலங்கை அரசு - அன்புமணி ராமதாஸ்

வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ள நிலையில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுகளுக்கு  ஏற்பாடு செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்ற  இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களின் மூன்று விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. வங்கக்கடலில் கச்சத்தீவை ஒட்டிய பகுதிகளில்  மீன் பிடிப்பதற்கு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கும் நிலையில் அவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வது கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு காரணம் அவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பது தான் என்று இலங்கை அரசின் சார்பில் கூறப்படுவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதவை. தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் சூழலைப் பார்த்தாலே அதன் பின்னணியை புரிந்து கொள்ள முடியும். கடந்த 15 நாட்களில் தமிழக மீனவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

கடந்த 27-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேர் இரு நாட்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து இப்போது 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மீனவர்கள் எப்போதும் தங்கள் நாட்டு சிறைகளில் அடைபட்டு கிடக்க வேண்டும்  என்று நினைக்கும் இலங்கை அரசு, அதற்கான சதித்திட்டத்தின் அடிப்படையில் தமிழக மீனவர்களை கைது செய்து வருகிறது.

TABCEDCO Loan Schemes: தொழில் தொடங்க கடன் வேணுமா? ரூ.15 லட்சம், 6% மட்டுமே வட்டி - அள்ளித் தரும் தமிழக அரசு

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் கடந்த மாதம் 29-ஆம் தேதி மீனவர் பிரச்சினைக்கான இந்திய - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. அதில் மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆனால், கூட்டம் முடிந்து 13 நாட்களாகியும் அதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாதது வருத்தமளிக்கிறது.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், இந்திய - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தில்  எடுக்கப்பட்ட முடிவின்படி மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுகளை விரைந்து நடத்த மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”என்ன கூப்பிடுங்க, நானே வர்றேன்” எடப்பாடிக்கு சவால் விட்ட உதயநிதி..!
”என்ன கூப்பிடுங்க, நானே வர்றேன்” எடப்பாடிக்கு சவால் விட்ட உதயநிதி..!
TN Rain Alert : “12 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை” வந்தது வானிலை அப்டேட்..!
TN Rain Alert : “12 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை” வந்தது வானிலை அப்டேட்..!
EPS - Vijay: ”பாஜகவுக்கு NO சொன்ன EPS”  விஜய்க்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்  முதல்வர் வேட்பாளர் யார்?
EPS - Vijay: ”பாஜகவுக்கு NO சொன்ன EPS” விஜய்க்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் முதல்வர் வேட்பாளர் யார்?
”பெரும் பரபரப்பு” நடுவானில் விமானத்தில் பிடித்தது தீ - பயணிகள் கதி என்ன..?
”பெரும் பரபரப்பு” நடுவானில் விமானத்தில் பிடித்தது தீ - பயணிகள் கதி என்ன..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamal Haasan Ulaga Nayagan | அஜித் பாணியில் கமல்! திடீர் அறிவிப்பு ஏன்? உலக நாயகன் 24 வருட பின்னணிEPS ADMK Alliance | ”பாஜகவுக்கு NO சொன்ன EPS” விஜய்க்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்!முதல்வர் வேட்பாளர் யார்?Delhi Ganesh | IND-PAK போரால் சினிமா ENTRY! விமானப்படையில் 10 ஆண்டுகள்! டெல்லி கணேஷ்-ன் சுவாரஸ்ய கதைSalem Doctor fight |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”என்ன கூப்பிடுங்க, நானே வர்றேன்” எடப்பாடிக்கு சவால் விட்ட உதயநிதி..!
”என்ன கூப்பிடுங்க, நானே வர்றேன்” எடப்பாடிக்கு சவால் விட்ட உதயநிதி..!
TN Rain Alert : “12 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை” வந்தது வானிலை அப்டேட்..!
TN Rain Alert : “12 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை” வந்தது வானிலை அப்டேட்..!
EPS - Vijay: ”பாஜகவுக்கு NO சொன்ன EPS”  விஜய்க்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்  முதல்வர் வேட்பாளர் யார்?
EPS - Vijay: ”பாஜகவுக்கு NO சொன்ன EPS” விஜய்க்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் முதல்வர் வேட்பாளர் யார்?
”பெரும் பரபரப்பு” நடுவானில் விமானத்தில் பிடித்தது தீ - பயணிகள் கதி என்ன..?
”பெரும் பரபரப்பு” நடுவானில் விமானத்தில் பிடித்தது தீ - பயணிகள் கதி என்ன..?
Gautam Gambhir :  இந்திய அணியின் புதிய கேப்டன் யார்? சஸ்பென்ஸ் வைத்த கம்பீர்
Gautam Gambhir : இந்திய அணியின் புதிய கேப்டன் யார்? சஸ்பென்ஸ் வைத்த கம்பீர்
”திமுக-விற்கு செல்கிறாரா நா.த.க.காளியம்மாள்?” என் குரலாக நானே ஒலிப்பேன் என அறிவிப்பு..!
”திமுக-விற்கு செல்கிறாரா நா.த.க.காளியம்மாள்?” என் குரலாக நானே ஒலிப்பேன் என அறிவிப்பு..!
”மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர EPS முடிவு?” அதிருப்தியில் அதிமுக நிர்வாகிகள்..!
”மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர EPS முடிவு?” அதிருப்தியில் அதிமுக நிர்வாகிகள்..!
Kamal Haasan:
Kamal Haasan: "உலகநாயகன், ஆண்டவர் பட்டம் வேண்டாம்" அஜித் வழியில் கமல் - ரசிகர்கள் ஷாக்
Embed widget