மேலும் அறிய

Video : "நீங்க செய்யுறது தொண்டு” : அரசுப்பள்ளி ஆசிரியரை கவிஞர் வைரமுத்துவிடம் பேசவைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்! ஏன்?

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தருமபுரி மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் பார்க்கும் திறன் இழந்தவர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாவட்டவாரியாகப் பள்ளிகளில் நேரடி ‘விசிட்’ செய்து அதிரடி ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வரிசையில் தருமபுரி மாவட்டம் அரசுப்பள்ளி ஒன்றுக்கு விசிட் செய்த அமைச்சர் அங்கே ஆசிரியர் ஒருவர் பாடம் எடுக்கும் முறையால் அசந்துபோய், அவருக்காக ஒரு சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தருமபுரி மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பணியாற்றும்  தமிழ் ஆசிரியை தமிழ்ச்செல்வி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அவர் பார்க்கும் திறன் இழந்தவர். அவர் தனது பள்ளி பாடத்தில் வைரமுத்துவின் கவிதை வரிகளை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் பார்த்து அமைச்சர் வியந்துள்ளார். ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இடம் பெறும் வைரமுத்துவின் ‘ஓ என் சமகாலத் தோழர்களே’ கவிதை வரிதான் அது. 

இதனைக் கேட்டு வியந்த அமைச்சர் உடனடியாக வைரமுத்துவுக்கு செல்ஃபோனில் அழைத்தார். ஆசிரியர் கவிதை கற்பித்ததைக் கண்டு வியந்ததாகவும் அதை வைரமுத்துவிடம் பகிரத்தான் அழைத்ததாகவும் கூறிய அமைச்சர் அடுத்து ஃபோனை ஆசிரியரிடம் கொடுத்தார். ஆசிரியரிடம் பேசிய வைரமுத்து,”சமகாலத் தோழரே! உங்கள் தொண்டு உயர்ந்தது. இரண்டு கண்கள் இல்லையென்றாலும் இருபது விரல்களும் இருபது கண்கள் என்பதே நம்பிக்கை. நான் தருமபுரி வரும்போது நிச்சயம் உங்களை வந்து சந்திக்கிறேன். வாழ்த்துகள்” எனக் கூறினார். 

தான் வைரமுத்துவின் தீவிர வாசகர் என்றும் சிறு வயதிலிருந்தே கள்ளிக்காட்டு இதிகாசம் கேட்டுள்ளதாகவும் கூறிய ஆசிரியர் வைரமுத்துவிடம் பேசியது மகிழ்ச்சி எனப் பகிர்ந்தார். 

ஓ, என் சமகால தோழர்களே :

ஆசிரியர் - கவிஞர் வைரமுத்து 

ஊர் - தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர்

வைரமுத்து பெற்ற விருதுகள் :

  • இந்திய அரசின் உயர்ந்த விருதுகளுள் ஒன்றான பத்மபூஷண் விருது பெற்றவர்.
  • கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்திற்காக 2003ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றவர்.
  • இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை ஏழு முறையும், மாநில அரசின் விருதினை ஆறு முறையும் பெற்றவர்.
  • ஓ, என் சமகால தோழர்களே என்ற இப்பாட பகுதி வைரமுத்து கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

ஓ, என் சமகால தோழர்களே கவிதை விளக்கம் :

அறவியலும், அறிவியலும் இணைந்து வளர்ந்ததே தமிழ் சமூகம். எனவே அறவியலோடு அறிவியல் கண்ணோட்டமும் வளர்க்கப்பட வேண்டும் என்பதை தற்கால படைப்பாளர்கள் வலியுறுத்திகின்றனர். அவ்வகையில், அறிவியல் துறையில் தமிழர்கள் சிறந்து விளங்க வேண்டும். 

உங்களுக்காக அந்த கவிதையின் வரிகள்: 

”ஏவும் திசையில் அம்பைப் போல

இருந்த இனத்தை மாற்றுங்கள் 

ஏவு கணையிலும் தமிழை எழுதி 

எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்” என்று பாடியுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6491
Active
6861
Recovered
65
Deaths
Last Updated: Mon 9 June, 2025 at 06:46 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Watch Video: தொடர்ந்து தாக்கும் ரஷ்யா; அசராமல் எதிர்க்கும் உக்ரைன் - வீடியோ வெளியிட்ட பதுகாப்புப் படை
தொடர்ந்து தாக்கும் ரஷ்யா; அசராமல் எதிர்க்கும் உக்ரைன் - வீடியோ வெளியிட்ட பதுகாப்புப் படை
Seeman: ”இல்லை, இல்லை” அப்ப எதுக்கு ரூ.45 கோடி? திறந்தா மட்டும் போதுமா? CM ஸ்டாலினை ரவுண்டு கட்டிய சீமான்
Seeman: ”இல்லை, இல்லை” அப்ப எதுக்கு ரூ.45 கோடி? திறந்தா மட்டும் போதுமா? CM ஸ்டாலினை ரவுண்டு கட்டிய சீமான்
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: தொடர்ந்து தாக்கும் ரஷ்யா; அசராமல் எதிர்க்கும் உக்ரைன் - வீடியோ வெளியிட்ட பதுகாப்புப் படை
தொடர்ந்து தாக்கும் ரஷ்யா; அசராமல் எதிர்க்கும் உக்ரைன் - வீடியோ வெளியிட்ட பதுகாப்புப் படை
Seeman: ”இல்லை, இல்லை” அப்ப எதுக்கு ரூ.45 கோடி? திறந்தா மட்டும் போதுமா? CM ஸ்டாலினை ரவுண்டு கட்டிய சீமான்
Seeman: ”இல்லை, இல்லை” அப்ப எதுக்கு ரூ.45 கோடி? திறந்தா மட்டும் போதுமா? CM ஸ்டாலினை ரவுண்டு கட்டிய சீமான்
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
Hyundai Hybrid SUVs: இனி எங்கும் ஹைப்ரிட் தான் - ஒதுங்காட்டி, தூக்கி சாப்பிட தயாரான ஹுண்டாய் - 3 மாடல்கள்
Hyundai Hybrid SUVs: இனி எங்கும் ஹைப்ரிட் தான் - ஒதுங்காட்டி, தூக்கி சாப்பிட தயாரான ஹுண்டாய் - 3 மாடல்கள்
AXIOM-4 Mission : என்ன ஆச்சு..! இந்தியர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு, மீண்டும் எப்போது?
AXIOM-4 Mission : என்ன ஆச்சு..! இந்தியர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு, மீண்டும் எப்போது?
Russia Massive Drone Attack: விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
TVK - DMDK Alliance.?: தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
Embed widget