மேலும் அறிய

Rajinikanth: பரபரப்பான அரசியல் சூழலில் ரஜினிகாந்த் அறிக்கை; என்ன சொல்லி இருக்கார் தெரியுமா.?

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்த பின்னரும் அரசியல் சூழல் பரபரப்பாகவே காணப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டள்ளார். அதில் அவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா.?

தமிழ்நாட்டில், சட்டமன்ற தேர்தல் முடிந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து, விஜய் முதலமைச்சராகிவிட்ட நிலையிலும், அரசியல் சூழல் என்னவோ பரபரப்பாகவே காணப்படுகிறது. அதற்கு காரணம், இடைத்தேர்தல் வர உள்ளது தான். முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கில், தவெக சார்பில் போட்டியிடப் போவது யார் என்ற கேள்வி தான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாப்பிக். அந்த செய்திக்குள் லேட்டஸ்ட்டாக அடிப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர் நடிகர் ராகவா லாரன்ஸ். அவருக்கும் ரஜினிக்கும் சம்பந்தம் இருக்கிறதல்லவா.? அதேபோல், அண்ணாமலையின் அரசியல் திருப்பதிலும் ரஜினிகாந்த்தின் பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் தான் ரஜினி தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.

ரஜினிகாந்த்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன.?

சரியாக சொல்லப்போனால், ரஜினிகாந்த்தின் உத்தரவுப்படி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எந்த ஒரு கட்சியோ, அமைப்போ, ரஜினிகாந்த்தின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ் விவகாரத்தில் அடிபடும் ரஜினிகாந்த்தின் பெயர்

முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் நிறுத்தப்பட உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும், தனது அரசியல் என்ட்ரி குறித்து, தனது குருநாதரான ரஜினிகாந்திடம் ராகவா லாரன்ஸ் அறிவுரை கேட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. அதைப் பொறுத்து அவரது முடிவு அமையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.

அதற்கு ஏற்றார்போல், நேற்று தனது அரசியல் என்ட்ரி குறித்து மனம் திறந்த ராகவா லாரஸ், தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில், தான் நம்பிக்கை வைத்த ஒருவரும், தனக்கு நெருக்கமான ஒருவரும் அரசியலுக்கு வந்தால், அவர்களுக்கு துணையாக நின்று, அவர்களுடன் இணைந்து, தான் தனிப்பட்ட முறையில் செய்து வந்த சமூகப் பணிகளைவிட பெரிய அளவில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே தன் ஒரே எண்ணமாக இருந்தது என்றும், ஆனால், இன்று ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் தன்னை அரசியலில் களமிறங்க வேண்டிய ஒரு நிலைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் 18 நிமிட வீடியோ ஒன்றை பதிவிட்ட ராகவா லாரன்ஸ், நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவிருந்த நிலையில், அதில் இணைந்து செயல்பட தான் தயாராக இருந்ததாகவும், ஆனால் தவிர்க்க முடியாத சூழலால் அது நடைபெறவில்லையென்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் முக்கியமாக, விஜய் அரசியல் கட்சித் தொடங்கி பெருவாரியான மக்கள் செல்வாக்கில் வெற்றி பெற்றிருப்பது பற்றி தன்னுடைய தாயிடம் தான் தெரிவித்தபோது தன்னையும் அரசியலில் ஈடுபடுமாறு தனது தாய் உத்தரவிட்டதாகவும், உடனடியாக அவரது காலில் விழுந்து தான் வணங்கியதாகவும் அந்த வீடியோவில் ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

அதே நேரத்தில், தான் அரசியலுக்கு வரலாமா.? அல்லது வேண்டாமா.? என்பது குறித்து தனது ரசிகர்கள் கருத்து தெரிவிக்குமாறு தெரிவித்துள்ள லாரன்ஸ், தான் 22 வருடம் செய்த உதவியின் விளைவாக வளர்ந்து நிற்கிற 4 இளைஞர்களை தன்னுடைய வீடியோவில் இடம்பெற செய்து, இதனை பார்த்த பிறகு முடிவை சொல்லுங்கள் என தெரிவித்திருக்கிறார்.

அண்ணாமலை விவகாரத்திலும் அடிபடும் ரஜினியின் பெயர்

இதேபோல், அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி, தனியாக ஒரு அமைப்பை தொடங்கியிருப்பதற்கும், அவரது தனித்த அரசியல் பிரவேசத்திற்கும் பின்னணில் ரஜினிகாந்த் இருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

இப்படி, இரு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் ரஜினிகாந்த்தின் பெயர் அடிபடுவதால், தற்போது அறிக்கை மூலம் அதற்க முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரஜினிகாந்த்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget