காலையிலேயே கோர விபத்து.. லாரி-பேருந்து மோதல்.. பயணிகளுக்கு என்ன ஆச்சு?
அரசு பேருந்து மீது லாரி நேருக்கு நேர் மோதி சிறிது தூரம் இழுத்துச்சென்று காலணி தொழிற்சாலை சுவரின் மீது மோதி நின்றது,

ஆம்பூர் அருகே அரசுப்பேருந்தும் லாரியும் நேருக்கு மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து பேர்ணாம்பட் நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தது அப்போது, துத்திப்பட்டு பகுதியில் அரசு பேருந்து மீது எதிரே கொல்காத்தாவிலிருந்து ஆம்பூருக்கு தோல் பொருட்கள் ஏற்றி வந்த லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அதே சாலையில் எதிரே வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி சிறிது தூரம் இழுத்துச்சென்று காலணி தொழிற்சாலை சுவரின் மீது மோதி நின்றது,
இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் அரசு பேருந்தில் பயணம் செய்த காலணி தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர் உட்பட 17 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து உடனடியாக அவசர ஆம்புலன்ஸ் எண்ணிற்கு தகவல் அனுப்பப்பட்டது.
உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைகாக ஆம்புலன்சில் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அதனை தொடர்ந்து, அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் 3 பெண் தொழிலாளர்களை மருத்துவர்கள் மேல்சிகிச்சைகாக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,
அதனை தொடர்ந்து, உமராபாத் காவல்துறையினர் இவ்விபத்து குறித்து வழக்குபதிவு செய்து, விபத்தில் சிக்கிய அரசு பேருந்து மற்றும், லாரி ஜே.சி.பி இயந்திரம் மூலம் சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
மேலும் விபத்து ஏற்பட்ட இடத்தில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆய்வு மேற்க்கொண்டு, விபத்தில் சிக்கி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காலணி தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள் உட்பட 17 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...























