Amaravati dam: மழை குறைவால் அமராவதி அணையில் தண்ணீர் வரத்து குறைப்பு
வாய்க்காலில் வினாடிக்கு 220 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. அமராவதி அணைக்கு நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைவால் அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது.
அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு.
வரத்து குறைவால் அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து கடந்த ஒன்றாம் தேதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 2,500 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைவால் அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது.
அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 425 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. வரத்துக்குறைவால் காலை 6:00 மணி வரப்படி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் வினாடிக்கு 100 கன அடியாக திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு 220 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. அமராவதி அணைக்கு வினாடிக்கு காலை 623 கன அடி தண்ணீர் வந்தது.
90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 46.69 அடியாக இருந்தது. கரூர் மாவட்டத்தில் காலை 8:00 மணி வரை முடிந்த 24 மணி நேரத்தில் கரூர் 1.2 மில்லிமீட்டர் மாயனூரில் 2 மைலம்பட்டியில் மூன்று மில்லி மீட்டர் மழை பதிவானது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்