AIADMK issue: கலவரத்தில் முடிந்த பொதுக்குழு... விசாரிக்க திஷா மிட்டல் தலைமையில் தனிப்படை அமைப்பு!
AIADMK issue: நேற்று நடந்த அதிமுக தலைமை அலுவலக கலவரம் தொடர்பாக மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
![AIADMK issue: கலவரத்தில் முடிந்த பொதுக்குழு... விசாரிக்க திஷா மிட்டல் தலைமையில் தனிப்படை அமைப்பு! AIADMK issue : Mylapur Deputy Commissioner Disha Mittal's special force organization with AIADMK head office riots AIADMK issue: கலவரத்தில் முடிந்த பொதுக்குழு... விசாரிக்க திஷா மிட்டல் தலைமையில் தனிப்படை அமைப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/12/f83fae0125625e9874af3b9a8bb05f6e1657624537_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நேற்று நடந்த அதிமுக தலைமை அலுவலக கலவரம் தொடர்பாக மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 14 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து யார் யார் கலவரத்தில் ஈடுபட்டார்கள் என அவர்களை கண்டறிந்து கைது செய்வதற்காக மூன்று உதவி ஆணையர்கள் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது.
அதேபோல், இபிஎஸ் தரப்பில் 200 நபர்கள் ஓபிஎஸ் தரப்பில் 200 நபர்கள் என கலவரத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது ஏழு பிரிவின் கீழ் ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை கண்டறிவதற்காக மூன்று உதவியாளர்கள் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
#JUSTIN | அதிமுக வங்கிக் கணக்கை வேறு யாரும் கையாளக்கூடாது - ஓபிஎஸ்https://t.co/wupaoCQKa2 | #OPanneerselvam #AIADMK #EdappadiPalaniswami pic.twitter.com/d06yPuT1P9
— ABP Nadu (@abpnadu) July 12, 2022
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நேற்று காலை வானகரத்தில் நடைபெற்றது. இந்தச் சூழலில் நேற்று காலை ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் தலைமை கழகம் சென்று அங்கு தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். அத்துடன் அங்கு எடப்பாடி மற்றும் ஒபிஎஸ் ஆதாரவாளர்கள் இடையே கடுமான மோதல் நடைபெற்றது.
மேலும் படிக்க : Iravin Nizhal Review: படமா இது? அதுக்கும் மேல... உலக பார்வையில் விழும் இரவின் நிழல்!
அப்போது, அதிமுகவின் தலைமை கழகத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த அலுவலகத்திற்கு சீல் வைக்க வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். மேலும் அங்கு சிஆர்பிசி பிரிவு 145 அங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, “ஒரு இடத்திற்கு இருவர் உரிமை கோரும் போது அந்த நேரத்தில் அங்கு இருக்கும் அமைதிக்கும் கேடு விளைவிக்கும் சூழல் உருவாகும் போது அந்த இரண்டு தரப்பினரும் அந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டும். அந்த இடத்திற்கு சீல் வைக்கப்படும். அந்த இடத்திற்கு பின்னர் வருவாய் கோட்டாட்சியர் வைக்கும் விசாரணையில் இரு தரப்பினரும் ஆஜராக தங்களுடைய தரப்பு வாதங்களை முன்வைத்த பிறகு இந்த இடத்திற்கான சீல் எடுக்கப்படும்” என்று சட்டம் தெரிவிக்கிறது என்று தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)