’உதயநிதியை போல் அதிமுகவில் திறமையான இளம் தலைவர்கள் இல்லை’- எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி
’’எதிர்காலத்தில் சிறந்த இளைஞர்களை வழிநடத்த கூடிய ஆற்றல் உதயநிதியிடம் உள்ளது’’
தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், உதயநிதி ஸ்டாலினுக்கு அனைத்து திறமைகளும் உள்ளன. நான், அவருடைய தாத்தா, அப்பா ஆகியோருடன் சுற்று பயணம் சென்ற போது ஏராளமான கூட்டம் கூடியது. அதே போல் உதயநிதிக்கு கூடுகிறது. அவரிடம் பொது மக்கள் யாராவது திடீரென கேள்வி கேட்டால் கூட தயக்கமின்றி சரியான பதில் கூறுகிறார். எதிர்காலத்தில் சிறந்த இளைஞர்களை வழிநடத்த கூடிய ஆற்றல் அவரிடம் உள்ளது. நான் எதிர்பார்த்த விட, அவரிடம் உள்ள ஆற்றல், பொது மக்களை சந்திக்கின்ற விதம், விமர்சனங்கள் ஏற்றுக்கொண்டு பதில் கூறுவது, இந்த காலத்தில் உள்ள இளைஞர்களிடம் உள்ள திறமைகள் கூடுதலாக உதயநிதியிடம் உள்ளது.
டிடிவி தினகரன், போல் ரெடிமேடாக கொண்டு வரவில்லை. ஓ.பன்னீர் செல்வம் போல் 200 கோடி செலவு செய்து தேர்தலை சந்திக்கவில்லை. 10 காசு கொடுக்காம தான் தேர்தலில் வெற்றி பெற்றோம். நிறைய புத்தகங்கள் படிக்கிறார். உதயநிதி ஸ்டாலினை முன்னிலை படுத்தவது தகுதியானது தான். அவரை பற்றி விவாதம் செய்வது ஏற்புடையதல்ல. அதிமுகவில் இது போல் திறமை வாய்ந்த இளம் தலைவர்கள் இல்லை. தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் நொடிக்கு நொடி அறிவிப்புகள். ஆனால் அதிமுகவில் பல வருடத்திற்கு பிறகு தான் அறிவிப்புகள் வரும்.
காவிரியில் வரும் செப்டம்பர் மாத்திற்குரிய தண்ணீர் வழங்க வேண்டும் கர்நாடகா அரசிற்கு என அழுத்தம் கொடுத்துள்ளோம். இரண்டு மாநிலங்கள் ஒத்து வந்தால் தான் பேச முடியாது என்று கூறுகிறார்கள். தேவையான அழுத்ததை கொடுத்தால் தான், முடிவு எடுத்துள்ளனர். ஆன்லைனில் பதிவு செய்து நெல் கொள்முதல் செய்வது சோதனை முறையில் மாவட்டத்தில் 2 இடங்களில் கடந்தாண்டு தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூர் மற்றும் பொன்னாப்பூர் கிராமத்தில் நடைபெற்றன.. அது வெற்றிகரமாக அமைந்தது. மேற்கொண்டு அதனை விரிவுபடுத்த ஆலோசனைகள் வழங்கி,அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் நெல் ஈரப்பதம் அதிகமாகி உள்ளது. ஈரப்பத சதவீதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர், அதிகாரிகளிடம் பேசப்படும். மேலும் நெல்லை உலர்த்த 50 நவீன எந்திரம் வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்கப்பட்டுள்ளது. இதனால் இனி வருங்காலத்தில் ஈரபதமான நெல் மணிகளால் விவசாயிகள் வேதனைப்பட வேண்டியதில்லை. இந்த நெல்லை உலர்த்தும் இயந்திரங்களை, வேளாண்மை பொறியியல் துறை மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு, அரசிடம் பேசப்படும்.
திருத்துறைப்பூண்டி-காரைக்குடி இடையே 64 இடங்களில் ஆளில்லா ரயில்வே கேட் அதிகம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் ரயிலின் பயண நேரம் அதிகரிக்கிறது. இதனை தடுக்க கேட் கீப்பர்கள் நியமிப்பது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் பேசி உள்ளோம். அதற்கு அவர்கள் மாநில அரசின் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஆட்கள் நியமிக்கலாம் என கூறி உள்ளனர். அந்த ரயில் தடத்திற்குட்பட்ட பகுதிகளில் 6 எம்பிக்கள் உள்ளோம். அதனால் ஆளில்லா ரயில்வே கேட் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
வல்லம் பேரூராட்சியை தஞ்சை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அப்பகுதி மக்கள், போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அவர்களிடம் நான் பேசி, உங்களது கருத்தை மாவட்ட நிர்வாகத்திடம் கூறுங்கள், பின்னர் உங்களின் கருத்தை, தமிழக அரசிடம் கூறி, வல்லம் பகுதியை தனி ஒன்றியமாக்குவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக முதல்வரிடம் பரிந்துரை செய்யப்படும். வல்லத்தை, தஞ்சாவூர் மாநகராட்சியிடன் இணைப்பதற்கு எனக்க விருப்பமில்லை. அதற்கு பதிலாக தஞ்சாவூர், ஒரத்தநாட்டிலுள்ள தலா 20 கிராமங்களை, தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைக்கலாம் என்றார்.