மேலும் அறிய

ADMK: காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி! கலக்கத்தில் சிவி சண்முகம்! அதிமுக-வில் நடப்பது என்ன?

சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்எல்ஏ-க்களை தன்வசம் இழுக்க எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே ஒவ்வொரு நாளும் தமிழக அரசியல் பரபரப்பாகவே இயங்கி வருகிறது. ஆளுங்கட்சியாக தவெக-வும், எதிர்க்கட்சியாக திமுக-வும் அமர்ந்துள்ள நிலையில், 3வது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. 

அதிமுக-வில் மோதல்:

எடப்பாடி பழனிசாமி தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு அதிமுக-வில் தொடர்ந்து தோல்வி முகமே இருந்து வருகிறது. தற்போது எஸ்பி வேலுமணி, சிவி சண்முகத்தின் தலைமையில் குறிப்பிட்ட எம்எல்ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும், அவர்கள் எஸ்பி வேலுமணியை சட்டமன்ற அதிமுக தலைவராக அறிவிக்கவும் வலியுறுத்தி வருகின்றனர். 

சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தலைமையிலான ஆதரவு எம்எம்ஏ-க்கள் தங்கள் ஆதரவை தவெக-விற்கு அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் அமைச்சரவையில் இடம்பிடிக்க அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி:

ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வியே ஆகும். தவெக அமைச்சரவையில் இடம்பிடித்தாலும் கட்சியின் மூத்தவர்களுக்கே அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்பதால் அவர்களின் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தங்களுக்கு பெரிய ஆதாயம் கிடைக்காது என்று கருதுகின்றனர்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அதாவது, சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தரப்பில் உள்ள எம்எல்ஏ-க்கள் தேர்தலுக்கு செய்த செலவை தாங்களே ஏற்பதாக உத்தரவாதம் அளித்து அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதிமுக-வில் காத்திருக்கும் சம்பவம்:

தனக்கு எதிராக செயல்பட்ட அனைத்து நிர்வாகிகளின் பதவிகளையும் எடப்பாடி பழனிசாமி பறித்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தற்போது வரை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று கூறிவந்தாலும், பொதுக்குழு விரைவில் கூட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். 

பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமியும் பொதுக்குழு கூடினால் அதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள  ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த தருணத்தைப் பயன்படுத்தி சசிகலா தரப்பினர் மீண்டும் தலைமையை கைப்பற்ற வியூகம் வகுத்து வருகின்றனர். இதுதொடர்பாக சசிகலா - தினகரன் இடையே தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது. 

இதையறிந்த, சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தரப்பினர் தங்களது தரப்பின் எம்எல்ஏ-க்களிடம் ஆட்சியில் பங்கு கிடைத்தால் காத்திருப்பிற்கு பலன் கிட்டும் என்று சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால், அதிமுக-வில் அடுத்தடுத்து வரும் நாட்களில் மிகப்பெரிய பிரளயம் வெடிக்கும்? என்பது மட்டும் உறுதியாக கூறலாம்.

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Top News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
ரூ.1.58 கோடியில் பள்ளி வகுப்பறைகள், மானியத்தில் சொட்டுநீர் பாசனம்: விழுப்புரத்தில் பொலிவுறும் அரசுத் திட்டங்கள்!
ரூ.1.58 கோடியில் பள்ளி வகுப்பறைகள், மானியத்தில் சொட்டுநீர் பாசனம்: விழுப்புரத்தில் பொலிவுறும் அரசுத் திட்டங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget