Seeman Case: கைது செய்யப்படுகிறாரா சீமான்? 8 பக்க வாக்குமூலத்தை அளித்த நடிகை விஜயலட்சுமி.. நடக்கப்போவது என்ன?
திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நடுவர் பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜராகி சீமானுக்கு எதிரான வழக்கில் வாக்குமூலம் அளித்தார்.
![Seeman Case: கைது செய்யப்படுகிறாரா சீமான்? 8 பக்க வாக்குமூலத்தை அளித்த நடிகை விஜயலட்சுமி.. நடக்கப்போவது என்ன? Actress Vijayalakshmi appeared before Thiruvallur Mahila Court Magistrate Pavitra and testified in the case against Seeman. Seeman Case: கைது செய்யப்படுகிறாரா சீமான்? 8 பக்க வாக்குமூலத்தை அளித்த நடிகை விஜயலட்சுமி.. நடக்கப்போவது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/01/056cb1ca2b414087edbc6d812db0d5591693569798645589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சீமான் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் விஜயலட்சுமி திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தின் நடுவர் பவித்ரா முன்பாக ஆஜராகி இரண்டரை மணி நேரம் மேலாக 8 பக்கங்கள் அளவில் வாக்குமூலம் அளித்தார்.
பிரபல நடிகையான விஜயலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 28 ஆம் தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் கோயம்பேடு துணை ஆணையர் உமையாள் ராமாபுரம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தி இருந்தார்.
அந்த விசாரணையில் சீமான் உடன் திருமணம் நடந்ததற்கான புகைப்படம் ஹோட்டலில் தங்கியதற்கான வீடியோ, வங்கி பணவர்த்தனை விவரம் ஆகியவை அளித்திருந்தார். மேலும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் கூறியிருக்கிறார். ஹோட்டலில் தங்கியிருப்பது, புகைப்படம், 7 முறை கருகலைப்பு, மிரட்டல் சம்மந்தமான அனைத்தையும் காவல் துறையினர் வாக்குமூலமாக பதிவு செய்துக் கொண்டனர்.
இந்நிலையில் விசாரணை முடிந்த பின் இன்று திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நடுவர் பவித்ரா முன்பாக மதியம் 2 மணி அளவில் போலீசார் அவரை ஆஜர் படுத்தினர்.
சீமான் திருமணம் செய்ததற்கான ஆதாரப் புகைப்படம் அவர் பேசியதற்கான ஆடியோ வங்கி பரிவர்த்தனை போன்ற விவரங்கள் சுமார் 2.30 நேரமாக 8 பக்கங்கள் கொடுத்து அவர் வாக்குமூலம் அளித்தார். அதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் அவரை மீண்டும் அழைத்துச் சென்றனர்.
மீண்டும் ஆஜராவதற்கான தேதிகள் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. வாக்குமூலம் அடிப்படையில் சீமான் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)