மேலும் அறிய

Chennai Metro Rail: சென்னை மெட்ரோவில் அலைமோதும் கூட்டம்... செப்டம்பர் மாதம் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை தெரியுமா?

சென்னை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி கடந்த மாதம் மட்டும் சுமார் 84.37 லட்சம் மக்கள் பயணம் மேற்கொண்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 செப்டம்பர்  மாதத்தில் 84.37 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளனர் என மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தை விட செப்டம்பர் மாத பயணிகளின் எண்ணிக்கை சற்று குறைவாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மெட்ரோ ரயில் அறிக்கையில், “சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில் 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் 84 லட்சத்து 37 ஆயிரத்து 182 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது:

நடப்பு அண்டு ஜனவரி மாதத்தில் 68,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 65,85,432 பயணிகளும், மே மாதத்தில் 72,58,007 பயணிகளும், ஜூன் மாதத்தில் 74,05,876 பயணிகளும், ஜூலை மாதத்தில் 82,53,692 பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 85,89,977 பயணிகளும் மற்றும் செப்டம்பர் மாதத்தில் 84,37,182 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 15.09.2023 அன்று 3,37,586 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2023 செப்டம்பர் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 32,54,175 பயணிகள் (Online OR 1,95,222; Static QR 90,786; Paper QR 24,96,130: Paytm 2,87,083; Whatsapp - 1,84,954), பயண அட்டைகளை (Travel Card" Ticketing System) பயன்படுத்தி 43,63,739 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 2,68,579 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 6,986 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 5,43,703 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

மெட்ரோ ரயில் மூலம் பயணம் செய்வதால் மக்கள் எந்த இன்னல்களும் இல்லாமல் எளிதில் பயணம் மேற்கொள்ல முடிகிறது. மெட்ரோ ரயிலில் கூடுதல் கட்டணம் வசூளிக்கப்படுவதால் ஆரம்பத்தில் பெரிதாக மக்கள் பயன்படுத்தவில்லை. ஆனால் மெட்ரோ ரயில் தரப்பில் பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் மெல்ல மெல்ல மெட்ரோ ரயில் மூலம் பயணம் மேற்கொள்ளத் தொடங்கினர். கடந்த மாதம் மட்டும் மெட்ரோவில் சுமார் 84 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது முதல் தற்போது வரை ஆகஸ்ட் மாதம் அதிகப்படியான மக்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அதாவது, 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மட்டும் 85,89,977 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.  இந்நிலையில் அதிக அளவு மக்கள் பயண் பெரும் நோக்கில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னையில் 2 ஆம்  கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்தப்படுகிறது.  மாதவரம்–சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம்–பூந்தமல்லி, மாதவரம்–சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் மொத்தம் 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதில்மொத்தம் 42.6 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட பணிகளை 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, 40-க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்டப் பாதை, சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் வழித்தடம் 3-ல் மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்துக்கு சுரங்கப்பாதை  சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை இயக்கி  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாதவரம் பால்பண்ணை ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Embed widget