மேலும் அறிய

TN Rain Alert: 3 மாவட்டங்களில் பொளக்கப்போகும் மிக கனமழை.. 10 மாவட்டங்களில் இருக்கு கனமழை.. இன்றைய வானிலை நிலவரம்..!

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழையும், 10 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழையும் 10 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

25.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள்  மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின்  மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

26.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

27.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

28.09.2023 மற்றும் 29.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள்  மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

30.09.2023 மற்றும் 01.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

குடியாத்தம் (வேலூர்) 12, திருவண்ணாமலை, மேலாலத்தூர் (வேலூர்) தலா  10,  சோழிங்கநல்லூர் (சென்னை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) தலா  7,  மதுராந்தகம் (செங்கல்பட்டு), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) தலா  6,  தாம்பரம் (செங்கல்பட்டு), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), மலர் காலனி (சென்னை), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), KCS மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), கல்லிக்குடி (மதுரை), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), எடப்பாடி (சேலம்), மதுக்கூர் (தஞ்சாவூர்), திருப்பத்தூர், பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), திருவள்ளூர், காட்பாடி (வேலூர்), செஞ்சி (விழுப்புரம்), மரக்காணம் (விழுப்புரம்), திண்டிவனம் (விழுப்புரம்) தலா  5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

தமிழக கடலோரப்பகுதிகள்:

28.09.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

25.09.2023: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும்  அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும்  அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

27.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

28.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள்,  தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய  மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

29.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: திமுக, பாஜக தான் டார்கெட்! சர்க்கார் அமைக்க விஜய்யின் மாஸ்டர் ப்ளான்!
TVK Vijay: திமுக, பாஜக தான் டார்கெட்! சர்க்கார் அமைக்க விஜய்யின் மாஸ்டர் ப்ளான்!
Donald Trump: முதல் நாள், முதல் கையெழுத்து.. ”பழச தூக்கி குப்பையில போடு” ட்ரம்பின் அதிரடி உத்தரவுகள்
Donald Trump: முதல் நாள், முதல் கையெழுத்து.. ”பழச தூக்கி குப்பையில போடு” ட்ரம்பின் அதிரடி உத்தரவுகள்
Donald Trump: நான் வந்துட்டேன்..! முதல்நாளே சம்பவம் செய்த அதிபர் ட்ரம்ப் - இத்தனை அறிவிப்புகளா? சீனாவிற்கு ஆப்பா?
Donald Trump: நான் வந்துட்டேன்..! முதல்நாளே சம்பவம் செய்த அதிபர் ட்ரம்ப் - இத்தனை அறிவிப்புகளா? சீனாவிற்கு ஆப்பா?
எம்.ஜி.ஆர். இருக்கும்போதே பெண்களை கடத்த முயற்சி! அடுத்து நடந்தது என்ன? நடிகை லட்சுமி பகீர்!
எம்.ஜி.ஆர். இருக்கும்போதே பெண்களை கடத்த முயற்சி! அடுத்து நடந்தது என்ன? நடிகை லட்சுமி பகீர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: திமுக, பாஜக தான் டார்கெட்! சர்க்கார் அமைக்க விஜய்யின் மாஸ்டர் ப்ளான்!
TVK Vijay: திமுக, பாஜக தான் டார்கெட்! சர்க்கார் அமைக்க விஜய்யின் மாஸ்டர் ப்ளான்!
Donald Trump: முதல் நாள், முதல் கையெழுத்து.. ”பழச தூக்கி குப்பையில போடு” ட்ரம்பின் அதிரடி உத்தரவுகள்
Donald Trump: முதல் நாள், முதல் கையெழுத்து.. ”பழச தூக்கி குப்பையில போடு” ட்ரம்பின் அதிரடி உத்தரவுகள்
Donald Trump: நான் வந்துட்டேன்..! முதல்நாளே சம்பவம் செய்த அதிபர் ட்ரம்ப் - இத்தனை அறிவிப்புகளா? சீனாவிற்கு ஆப்பா?
Donald Trump: நான் வந்துட்டேன்..! முதல்நாளே சம்பவம் செய்த அதிபர் ட்ரம்ப் - இத்தனை அறிவிப்புகளா? சீனாவிற்கு ஆப்பா?
எம்.ஜி.ஆர். இருக்கும்போதே பெண்களை கடத்த முயற்சி! அடுத்து நடந்தது என்ன? நடிகை லட்சுமி பகீர்!
எம்.ஜி.ஆர். இருக்கும்போதே பெண்களை கடத்த முயற்சி! அடுத்து நடந்தது என்ன? நடிகை லட்சுமி பகீர்!
Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
Satelite Machinegun: ரைட்ரா..! மனிதனே வேண்டாம், சாட்டிலைட் மூலம் இயக்கப்படும் துப்பாக்கிகள்? எந்த நாட்டில் தெரியுமா?
Satelite Machinegun: ரைட்ரா..! மனிதனே வேண்டாம், சாட்டிலைட் மூலம் இயக்கப்படும் துப்பாக்கிகள்? எந்த நாட்டில் தெரியுமா?
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
JSK vs PR: பவுலிங்கிலும் கில்லிடா! டி20யில் மிரட்டலாக பந்துவீசிய ஜோ ரூட் - மிரண்டு போன டுப்ளிசிஸ் டீம்!
JSK vs PR: பவுலிங்கிலும் கில்லிடா! டி20யில் மிரட்டலாக பந்துவீசிய ஜோ ரூட் - மிரண்டு போன டுப்ளிசிஸ் டீம்!
Embed widget