மேலும் அறிய

Accident : குழந்தையை பார்த்துவிட்டு திரும்பியபோது விபத்து..! சிறுமி உள்பட 3 பேர் உயிரிழப்பு..!

உளுந்தூர்பேட்டையில் இருந்து சென்னை காரில் திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி உள்பட 3 பெண்கள் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உளுந்தூர்பேட்டையில் இன்று அதிகாலை சென்னையை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, கார் வேகமாக வந்து கொண்டிருந்தபோது கார் சாலையின் ஓரமாக இருந்த தடுப்புக் கம்பிகள் மீது பலமாக மோதியது. இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

Accident : குழந்தையை பார்த்துவிட்டு திரும்பியபோது விபத்து..! சிறுமி உள்பட 3 பேர் உயிரிழப்பு..!

சுமார் 20 அடி ஆழத்தில் இருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் காரில் இருந்தவர்களுக்கு பலத்த அடிபட்டது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் மற்றும் சக வாகன ஓட்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து காரில் இருந்தவர்களை மீட்க முயற்சித்தனர். மேலும், போலீசார் மற்றும் ஆம்புலன்சிற்கும் தகவல் அளித்தனர்.

இந்த விபத்தில் காரில் இருந்த சிறுமி உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசாரின் விசாரணையில், உயிரிழந்த மூன்று பேரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

சென்னையைச் சேர்ந்தவர் ஏஜாஸ். இவரது பெற்றோர்கள் ஏஜாசை சேலத்தில் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஏஜாசிற்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, குழந்தையை பார்ப்பதற்காக ஏஜாஸின் தாய் ஹமீம், அவரது தங்கை அம்ரீன், அம்ரீனின் மகள் சுவேதா மற்றும் அவர்களது குடும்பத்தினர் சென்னையில் இருந்து சேலம் சென்றுள்ளனர். அங்கு ஏஜாஸின் குழந்தையைப் பார்த்துவிட்டு ஏஜாசையும் நலம் விசாரித்துள்ளனர்.

Accident : குழந்தையை பார்த்துவிட்டு திரும்பியபோது விபத்து..! சிறுமி உள்பட 3 பேர் உயிரிழப்பு..!

ஏஜாசை நலம் விசாரித்து விட்டு, சென்னைக்கு காரில் திரும்பியுள்ளனர். அப்போது, உளுந்தூர்பேட்டை அருகே வந்தபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஹமீம், அம்ரீன் மற்றும் சிறுமி சுவேதா ஆகியோர் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேர்களின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அவர்களது உடலை அனுப்பி வைத்தனர்.

மகளைப் பார்த்துவிட்டு சென்னை திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை

முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை

CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?

Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?

சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!

டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!

Embed widget