BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்
பிரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் நீங்கள் அறிந்து கொள்ள வசதியாக இந்த பிளாக் பகுதியில் அடுத்தடுத்து பிரேக்கிங் செய்திகள் அப்டேட் செய்யப்படும்.
LIVE
Background
யூடியூப் மூலம் ஆபசமாக பேசி வருவாய் ஈட்டி வந்த பப்ஜி மதன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு நேற்று முன்ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில், அவரது மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்ட நிலையில் மதன் தற்போது கைது.
டெல்லியில் இருந்து தமிழ்நாடு திரும்பினர் முதல்வர் ஸ்டாலின்
முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், நேற்று பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார். இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுலை அவர்களது இல்லத்தில் சந்தித்தார் ஸ்டாலின். தனது அரசு முறை பயணத்தை முடித்த அவர், தற்போது விமான மூலம் தமிழ்நாடு திரும்பியுள்ளார்.
பப்ஜி மதன் மனைவி வங்கி கணக்கு முடக்கம்
ஆபாசமாக யூடியூப்பில் பேசி பப்ஜி விளையாடி பணம் சம்பாதித்த வழக்கில் மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டனர். அவரது கார்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி கிருத்திகா வங்கி கணக்கில் ரூ.4 கோடி ரூபாய் இருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து மதனின் மனைவி கிருத்திகாவின் வங்கி கணக்கை போலீசார் முடக்கியுள்ளனர். முன்னதாக தனக்கு கொட்டிய பணத்திலிருந்து, திட்டுவதற்கும், ஆபாசமாக பேசுவதற்கும் 5 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பிறருக்கு மதன் ஊதியம் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பப்ஜி மதனின் சொகுசு கார்கள் பறிமுதல்
ஆபாச பப்ஜி மதன் தர்மபுரியில் கைது செய்யப்பட்ட நிலையில், தனது யூடியூப் மூலம் கிடைத்த வருமானத்தில் அவர் வாங்கிய விலை உயர்ந்த இரு சொகுசு ‛ஆடி’ கார்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதன் கைது: முன்ஜாமின் மனு தள்ளுபடி
தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் தர்மபுரியில் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நீதிபதி தண்டபாணி தள்ளுபடி செய்தார். கைது செய்யப்பட்டதால் முன்ஜாமின் தேவையில்லை எனக்கூறி அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
பப்ஜி மதன் கைது; தர்மபுரியில் பதுங்கியிருந்த போது சிக்கினார்
யூடியூப் மூலம் ஆபசமாக பேசி வருவாய் ஈட்டி வந்த பப்ஜி மதன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு நேற்று முன்ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில், அவரது மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்ட நிலையில் மதன் தற்போது கைது.