மேலும் அறிய

Aavin Cow Milk : இன்று முதல் செறிவூட்டப்பட்ட ஆவின் பசும் பால்.. ஆவினின் புதிய அறிமுகம்..

Aavin Enriched Vitamin : ஏ மற்றும் டி வைட்டமின் சேர்த்து செறிவூட்டப்பட்ட பசும் பால் ஆவினில் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏ மற்றும் டி வைட்டமின் சேர்த்து செறிவூட்டப்பட்ட பசும் பால் ஆவினில் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு செறிவூட்டப்பட்ட ஆவின் பசும் பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாலானது நோய் எதிர்ப்பு சக்தியை வைட்டமின் ஏ மற்றும் டி அதிகரிப்பதுடன் கண் பார்வையை மேம்படுத்தி எலும்புகளை உறுதிப்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

”தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் 27 மாவட்ட ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமப்புற பால் கூட்டுறவு சங்கங்களிலிருந்து பால் கொள்முதல் செய்து, ஒன்றியங்கள் மற்றும் இணைய பால்பண்ணைகளில் சுகாதாரமான் முறையில் பதப்படுத்தப்பட்டு. தமிழகமெங்கும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்து வருகிறது. தற்பொழுது ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு சுமார் 30 இலட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. கடந்தாண்டு சராசரி பால் விற்பனையைவிட 3 இலட்சம் லிட்டர் அதிகரித்திருக்கிறது.

வைட்டமின் A & D செறிவூட்டப்பட்ட பால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும், கண்பார்வையை மேம்படுத்துவதிலும் மற்றும் எலும்புகளை உறுதிப்படுத்துவதிலும் பங்கு வகிக்கின்றது. பாலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த சத்துக்கள், எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவையாகும். மேலும் உடலுக்கு தேவையான கால்சியத்தை பெற்றுத் தருவதில் வைட்டமின் D பங்களிப்பதினால், பாலில் வைட்டமின் D செறிவூட்டம் செய்வது மிகுந்த பயனளிப்பதாக இருக்கும் என இந்திய உணவு பாதுசாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அதன் அடிப்படையில் வைட்டமின் A மற்றும் D செறிவூட்டப்பட்ட பால் அறிமுகப்படுத்தப்படும் என சட்டசபை கூட்டத் தொடரில் பால் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித்துறை மானியத்தின்போது அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையிலும் வாடிக்கையாளர்களின் நலன் கருதியும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில், வைட்டமின் A மற்றும் வைட்டமின் D செறிவூட்டம் செய்யப்பட்ட பசும் பால் (பர்ப்பிள் நிற பால் பாக்கெட்) இன்று 09.05.2023 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தால் (FSSAI) பாலில் செறிவூட்டுதலுக்காக அனுமதிக்கப்பட்ட அளவில் பால் வகைகளில் வைட்டமின் A மற்றும் D செறிவூட்டம் செய்யப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் செறிவூட்டம் செய்யப்பட்ட ஆவின் பசும் பால் வகையினை வாங்கி பயன்டுத்துவதினால் உடலுக்கு தேவையான வைட்டமின் A மற்றும் D கிடைக்கப்பெறும்”.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தால் (FSSAI) பாலில் செறிவூட்டுதலுக்காக அனுமதிக்கப்பட்ட அளவில் பால் வகைகளில் வைட்டமின் A மற்றும் D செறிவூட்டம் செய்யப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Embed widget