மேலும் அறிய

Aavin Ghee: மீண்டும் உயர்ந்த விலை.. பால் விலையைத் தொடர்ந்து ஆவின் நெய் விலையும் உயர்வு.. விவரம்..

பால் விலையை தொடர்ந்து நெய் விலையையும் உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு மலிவு விலையில் பால் பொருட்கள் கிடைக்கும் வகையில், அரசு சார்பில் ஆவின் நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. அதில், ஐஸ் கிரீம், தயிர், நெய், ஆரஞ்ச் உள்ளிட்ட பல்வேறு நிற பால் பாக்கெட் உள்ளிட்டவைகளுடன், இனிப்பு வகைகளும் விற்கப்பட்டு வருகின்றன. தரம் மற்றும் மலிவு விலை ஆகிய காரணங்களால், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஆவின் நிறுவனத்திடமிருந்து தினசரி பால் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதேநேரம் அவ்வப்போது சூழலுக்கு ஏற்ப பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. 

நெய் விலை உயர்வு:

அதன்படி ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், ஒரு கிலோ நெய்யின் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில்,  ஒரு லிட்டர் நெய் விலை ரூ.580-லிருந்து ரூ.630 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 5 லிட்டர் நெய்யின் விலை  2,900 ரூபாயில் இருந்து, 3,250 ரூபாயாகவும், 500 மில்லி லிட்டர் நெய்யின் விலை 290 ரூபாயில் இருந்து 315 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 200 மில்லி லிட்டரின் விலை ரூ.130-லிருந்து 145 ரூபாயகவும், 100 மில்லி லிட்டர் நெய் விலை ரூ.70ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.   நெய் மீதான விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவின் பொருட்களின் விலை அவ்வப்போது உயர்ந்து வந்த நிலையில் நடப்பாண்டில் இரண்டாவது முறையாக நெய் விலை உயர்த்தப்பட்டு இருப்பது ஏழை எளிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

அண்மையில் உயர்த்தப்பட்ட பால் விலை:

முன்னதாக, தமிழ்நாட்டில் சில்லறை விற்பனையில் விற்கப்படும் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டின் விலை, கடந்த நவம்பர் மாதம் லிட்டருக்கு ரூ 12 உயர்த்தப்பட்டது.  புதிய விலை மாற்றத்தின்படி, சில்லறை விற்பனையில்  அரைலிட்டர் அளவில் விற்கப்படும் நிறைகொழுப்பு கொண்ட ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை ரூ 24-இல் இருந்து 30 ஆக உயரும் என்றும், ஒரு லிட்டர் பால் பாக்கெட் விலை ரூ.60 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலையை ஏற்றியதால் அதனை ஈடுக்கட்ட இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்தது. அதேநேரம்,  மாதாந்திர அட்டைதாரர்களுக்கு விற்கப்படும் அனைத்துவகை பாலின் விலையும் உயர்த்தப்படாமல், பழைய விலையிலேயே விற்பனை நடைபெற்று வருகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

AIADMK: யார் கூட்டுக் களவாணிகள்? .. திமுக எதிரி நாங்க தான்.. நீங்க உத்தமரா?.. விஜயை விளாசிய அதிமுக!
AIADMK: யார் கூட்டுக் களவாணிகள்? .. திமுக எதிரி நாங்க தான்.. நீங்க உத்தமரா?.. விஜயை விளாசிய அதிமுக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
Embed widget