மேலும் அறிய

TN Weather Update: வாட்டி வதைக்கும் கோடை வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை..

தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது.

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் 19 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு:

13.03.2024 மற்றும் 14.03.2024: தமிழகத்தில்   ஒருசில இடங்களில்    அதிகபட்ச    வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக  இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இன்று முதல் மார்ச் 17 ஆம் தேதி வரை,  அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது  ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான  வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 38.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் கரூர் மாவட்டத்தில் 38.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 35.1 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாத்தில் 33.2 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பணிக்கு செல்லும் மக்கள், பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஏப்ரல், மே மாதங்கள் மற்றும் அக்னி நட்சத்திரத்தின் போது வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரித்து காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

நேபாளம் வெள்ளப்பெருக்கில் மாயமானவர்களின் உறவினர்கள் 23 பேரிடம் இருந்து டிஎன்ஏவுக்காக ரத்த மாதிரி சேகரிப்பு
நேபாளம் வெள்ளப்பெருக்கில் மாயமானவர்களின் உறவினர்கள் 23 பேரிடம் இருந்து டிஎன்ஏவுக்காக ரத்த மாதிரி சேகரிப்பு
அட்டைப் பிள்ளையாரால் நேர்ந்த பேரழிவு! பட்டுக்கோட்டையில் கதறும் தொழிலாளர்கள்!
அட்டைப் பிள்ளையாரால் நேர்ந்த பேரழிவு! பட்டுக்கோட்டையில் கதறும் தொழிலாளர்கள்!
Chennai Nude Puja Fraud: நிர்வாணப் பூஜை செய்தால் அது நடக்குமா? தென்காசி கிளி ஜோசியரின் பகீர் லீலைகள்!
நிர்வாணப் பூஜை செய்தால் அது நடக்குமா? தென்காசி கிளி ஜோசியரின் பகீர் லீலைகள்!
KN Nehru: கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KN Nehru: கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
எலக்ட்ரிக் கார் வாங்க சூப்பர் சான்ஸ்! நாட்டின் மலிவான டாடா டியாகோ EV-க்கு ரூ.1.45 லட்சம் தள்ளுபடி!
எலக்ட்ரிக் கார் வாங்க சூப்பர் சான்ஸ்! நாட்டின் மலிவான டாடா டியாகோ EV-க்கு ரூ.1.45 லட்சம் தள்ளுபடி!
US Iran War: கார்க் தீவு அருகே கலவரம்.! ஈரானிய எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; அதிகரிக்கும் பதற்றம்
கார்க் தீவு அருகே கலவரம்.! ஈரானிய எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; அதிகரிக்கும் பதற்றம்
Kia Sorento Vs Toyota Fortuner: கியா சொரெண்டோவா.? டொயோட்டா ஃபார்ச்சூனரா.? கொடுக்குற காசுக்கு ஒர்த்தானது எது.? ஒப்பீடு இதோ
கியா சொரெண்டோவா.? டொயோட்டா ஃபார்ச்சூனரா.? கொடுக்குற காசுக்கு ஒர்த்தானது எது.? ஒப்பீடு இதோ
CM Vijay: CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
கம்மி பட்ஜெட், 34 கி.மீ. மைலேஜ்; ஆல்டோ K10 காருக்கு ரூ.62,500 அதிரடி சலுகை அறிவித்த மாருதி!
கம்மி பட்ஜெட், 34 கி.மீ. மைலேஜ்; ஆல்டோ K10 காருக்கு ரூ.62,500 அதிரடி சலுகை அறிவித்த மாருதி!
Embed widget