மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உள்ளூர் முதல் உலகம் வரை ஒரு பார்வை; இன்றைய தலைப்புச் செய்திகள் இதோ..!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- எத்தனையோ தூரோகங்கள் மற்றும் வீழ்ச்சிக்குப் பின்னர் நான் உங்களைச் சந்திக்கின்றேன். பிரபாகரனின் மகள் துவாராகா எனப் பேசிய பெண் வீடியோவால் சர்ச்சை
- ஆயுதப் போராட்டம் முடிந்தால் தமிழீழத்துக்காக தொடர்ந்து போராடுவோம் - துவாரகா எனப் பேசிய பெண்
- துவாரகா உரை பிரபாகரன் மேற்கொள்ளவுள்ள திட்டத்திற்கு எடுத்துக்காட்டு - உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் பேட்டி
- பிரபாகரன் அவரது மனைவி உயிருடன் இருப்பது உண்மை என்றால் துவரகா மட்டும் வெளியில் தோன்றுவது ஏன்? பணம் சம்பாதிக்கும் நோக்கில் சிலர் இவ்வாறு செய்வதாக பிரபாகரன் அண்ணன் மகன் கார்த்தி மனோகரன் பேட்டி
- இந்தியப் பிரதமரை துவாரகா சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் - வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பேச்சு
- தமிழீழ விடுதலைக்கு அதிமுக பாஜகவின் தயவு தேவை; இது சந்தர்ப்பவாதம் இல்லை அரசியல் தந்திரம் - விசிக தலைவர் திருமாவளவன்
- தமிழ்நாடு முழுவதும் வெளுத்து வாங்கும் கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
- தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; 29ஆம் தேதி புயலாக உருவாகும்; டிசம்பர் 3ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை இருக்கும் - வானிலை மையம்
- நாடு முழுவதும் பரவி வாழும் சமூகநீதிக் குடும்பம் நாங்கள் - வி.பி. சிங் சிலையைத் திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
- தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் 15 லட்சத்து 33ஆயிரம் பேர் புதிதாக விண்ணப்பம் - தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
- அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகக் கூடாது என நிர்பந்தித்ததாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் உதவியாளர் உமாபதி மிரட்டியதாக நீர்வளத்துறை அதிகாரி வாக்குமூலம் - சென்னை உயர்நீதி மன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்
- அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து போடப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளின் விசாரணையை தள்ளிப்போடக்கூடாது, ஓபிஎஸ் கோரிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் ஆட்சேபனை மனு
- கிருத்துவரகள் மாநாட்டில் கலந்துகொள்ளவரும் இபிஎஸ்-ஐ வரவேற்க வைக்கப்பட்ட பேனருக்கு அனுமதி மறுப்பு; வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் போலீசாரிடம் வாக்குவாதம்
- சுடுகாட்டு கூரை ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்வகணபதி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
- இபிஎஸ்க்கு எதிராக அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு; சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு
- காவல் என்ற ஸ்டிக்கரை தனிப்பட்ட வாகனங்களில் பயன்படுத்தினால் நடவடிக்கை - தமிழ்நாடு ஏடிஜிபி எச்சரிக்கை
இந்தியா
- கலைகட்டும் தெலுங்கானா; முற்றுகையிட்ட தலைவர்கள்; இன்றுடன் முடிவுக்கு வருகின்றது பிரசாரம்; நாளை மறுநாள் தேர்தல்
- தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தீபோத்சவம் விழா கோலாகலம் - தீபமேற்றி தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
- சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க மனிதர்களைக் கொண்டு துளை அமைக்கும் பணி தீவிரம்; இதுவரை 1.6 மீட்டர் வரை துளை போடப்பட்டுள்ளதாக தகவல்
உலகம்
- இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்கள் நீடிப்பு
விளையாட்டு
- சென்னையில் நடக்கும் ஃபார்முலா ஒன் கார் பந்தையத்தைக் காண ரூ1,700 முதல் ரூ17 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயம்.
- இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று மாலை 7 மணிக்கு ஹவுகாத்தியில் நடக்கவுள்ளது. இந்தியா ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் முன்னிலை.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion