மேலும் அறிய

Chennai Trains: சென்னை மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்களே.. இன்றும் நாளையும் 58 ரயில்கள் ரத்து..!

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் இன்றும், நாளையும் மாற்றம் செய்யப்பட்டு 58 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் இன்றும், நாளையும் மாற்றம் செய்யப்பட்டு 58 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

சென்னையின் மிகப்பெரிய போக்குவரத்து சாதனங்களில் லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் பயணப்பட்டு வரும் மின்சார ரயில்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதிகாலை 3.45 மணி தொடங்கி இரவு 1 மணி வரை மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் திங்கள் முதல் சனி வரை ஒரு கால அட்டவணையிலும், ஞாயிற்றுக்கிழமை ஒரு கால அட்டவணையிலும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சில நேரங்களில் தண்டவாள பரமாரிப்பு பணி, சிக்னல் கோளாறு, கனமழை போன்ற சமயங்களில் நேர அமைப்பானது மாற்றியமைக்கப்படும்,

மின்சார ரயில்களை பொறுத்தவரை சென்னை கடற்கரை - தாம்பரம். செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை கடற்கரை - வேளச்சேரி ஆகிய 4 மார்க்கங்களில் நூற்றுக்கணக்கான ரயில்கள் தினம்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், வெளியூர் பயணிகள் என அனைவரும் இந்த ரயில்களில் பயணப்பட்டு வருகின்றனர். விமான நிலையம்,முக்கிய ரயில் நிலையங்களை மின்சார ரயில்கள் இணைப்பதால் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி காணப்படும். 

இப்படியான நிலையில் கடந்த அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தினங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. முன்னறிவிப்பின்றி நடைபெற்ற இந்த பணிகளால் பல ரயில்கள் கிட்டதட்ட 3 மணி நேரம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். மேலும் மேற்கண்ட அந்த 2 நாட்கள் அரசு விடுமுறை தினமாக சென்றதால் பலரும் வெளியே செல்ல எண்ணிய நிலையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. 

இந்நிலையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (அக்டோபர் 7) 14 ரயில்களும், நாளை (அக்டோபர் 8) 44 மின்சார ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

இன்று இரவு சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்களில் இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் இரவு 11.30 மணி காலை 6.30 மணி வரை 14 மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மூர் மார்க்கெட்டில் இருந்து இரவு 10.35க்கு  பட்டாபிராம் புறப்படும் ரயில், இரவு 11.30 மற்றும்  11.45 மணிக்கு ஆவடி செல்லும் ரயில், மிலிட்டரி சைடிங்கில் ஆவடிக்கு இரவு 11.55க்கு வரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல் மூர்மார்க்கெட்டில் இருந்து நாளை காலை 4.15 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரில் சைடிங் செல்லும் ரயில், திருவள்ளூருக்கு காலை 4.30 மணிக்கு புறப்படும் ரயில், அரக்கோணத்துக்கு 5.30 மணிக்கு புறப்படும் ரயில், திருவள்ளூருக்கு 5.40 மணிக்கு புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.நாளை காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவை, காலை 10.05 முதல் மதியம் 3.30 மணி வரை தாம்பரம் - கடற்கரை இடையேயான சேவை, காலை 9.40 மணி வரை மதியம் 1 மணி வரை செங்கல்பட்டு - சென்னை கடற்கரை வரையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

பயணிகள் வசதிக்காக தாம்பரம் - செங்கல்பட்டு இடையே காலை 11 மணி, 11.50, மதியம் 12.30, 12.50, 1, 1.45, 2.15 மணிக்கு சிறப்பு ரயில்களும், காலை 9.40 , 10.20, 10.55, 11.30,மதியம் 12 மணி, 12.20, 1 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
உஷார்! சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget