மேலும் அறிய

Cuddalore: கடலூர் தென்பெண்ணை ஆற்றில்‌ கிடைத்த 160 தோட்டாக்கள்.. போலீசார் தீவிர விசாரணை..!

கடலூர் மாவட்டத்தில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் துப்பாக்கி தோட்டாக்கள் கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் துப்பாக்கி தோட்டாக்கள் கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்றான தென்பெண்ணை கர்நாடகாவில் தொடங்கி தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இதனிடையே  கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே  தென்பெண்ணை ஆறு செல்கிறது. 
 
இங்கு நேற்று சிறுவர்கள் உட்பட சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் இறால் மீனை கையில் பிடிக்க ஆற்றுக்குள் கைவிட்ட நிலையில், அவனது கையில்  சில துப்பாக்கி தோட்டாக்கள் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அந்த துப்பாக்கி தோட்டாக்களை ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு பணியில் இருந்த காவல் துறையினரிடம் கொடுத்துள்ளனர். 

இதுகுறித்து போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது  தோட்டாக்கள் கிடைத்த இடத்தை  சோதனை செய்தபோது மேலும் ஏராளமான தோட்டாக்கள் கிடைத்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த பகுதி முழுவதுமாக தொடர்ச்சியாக சோதனை நடத்தியதில் கிட்டதட்ட 160  தோட்டாக்களை கைப்பற்றப்பட்டது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.  இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கண்காணிப்பாளர் ராஜாராம், ‘தென்பெண்ணை ஆற்றில் கிடைத்த தோட்டாக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த தோட்டாக்களில் மண் படிந்திருப்பதால் அவற்றை முழுமையாக பரிசோதிக்க வேண்டிய நிலை உள்ளது. அதன் பிறகு தான் அந்த தோட்டாக்கள் எந்த காலத்தை சேர்ந்தது என்பது தெரியவரும். இந்த தோட்டாக்கள் அனைத்தும் ஏர் பிஸ்டல், ரிவால்வர் போன்ற துப்பாக்கிகளில் பயன்படுத்தக்கூடிய வகையைச் சேர்ந்தது இவை அனைத்தும் இதுவரை பயன்படுத்தாத தோட்டாக்களாக உள்ளது’ என கூறினார். 

இதனிடையே இன்று காலை மீண்டும் அதே இடத்தில் 8 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.   இந்த பகுதியில் ஆயுத குவியல் ஏதேனும் இருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் நீச்சல் வீரர்களை கொன்று தேடுதல் பணியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த மாதம் தென்பெண்ணை ஆற்றில் மீனவர் வீசிய வலையில் ஏர் பிஸ்டல் வகை துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க: Police Suicide: "நான் போறேன் மா..." ஆவடி ஆயுதப்படை காவலர் சேலத்தில் தற்கொலை... தாய்க்கு உருக்கமான கடிதம்..!

தலைப்பு செய்திகள்

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Embed widget