மேலும் அறிய

ஒரு மாதத்தில் 1000 கடல் ஆமைகள் இறப்பு... அரசு என்ன செய்கிறது - அன்புமணி ராமதாஸ் கேள்வி

கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் இறந்து கிடக்கும் கடல் ஆமைகள் அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது.

ஒரு மாதத்தில் 1000 கடல் ஆமைகள் இறப்பு, தஞ்சம் தேடி வரும் அரிய உயிரினங்களைக் காக்கும் கடமை தமிழக அரசுக்கு இல்லையா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையின் வடக்கு எல்லையான பழவேற்காட்டில் தொடங்கி முதல் செங்கல்பட்டு மாவட்டத்தின் கல்பாக்கம் வரையிலான வங்கக் கடற்கரையில் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதற்காக உலகின் பல நாடுகளில் இருந்த வந்த ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்டவை கடந்த ஒரு மாதத்தில் உயிரிழந்திருக்கின்றன என்ற செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கடல் ஆமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காத தமிழக அரசுதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

உலகில் வேகமாக அழிந்து வரும் கடல் ஆமை இனங்களில் ஒன்றான ஆலிவ் ரிட்லி எனப்படும் சிற்றாமைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதற்கு ஏற்ற இடமாக வங்கக் கடற்கரைகள் கருதப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் தொடங்கி மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் உலகின் பல்வேறு நாட்டு கடல்களிலும் வாழும் ஆலிவ் ரிட்லி ஆமைகள் பல்லாயிரக்கணக்கான கடல் மைல் தொலைவுக்கு பயணம் செய்து வங்கக் கடலோரத்திற்கு வருகின்றன. ஒதிஷாவின் கஹிர்மாதா, ருசிகுல்யா கடற்கரைக்கு செல்லும் கடல் ஆமைகள் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் முட்டையிட்டு குஞ்சு பொறித்துச் செல்லும் நிலையில், தமிழ்நாட்டில் சென்னை பழவேற்காடு முதல் கல்பாக்கம் வரையிலான கடற்கரைக்கு முட்டையிடுவதற்காக வரும் ஆலின் ரிட்லி கடல் ஆமைகள் மட்டும் கொத்துக் கொத்தாக உயிரிழப்பது பெரும் கவலையளிக்கிறது.

சென்னையிலும், சென்னை புறநகர் பகுதிகளிலும் ஒவ்வொரு நாள் காலையிலும் பார்த்தால் ஏராளமான கடல் ஆமைகள் உயிரிழந்து கிடக்கின்றன. கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் இறந்து கிடக்கும் கடல் ஆமைகள் அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. சென்னைக்கும் கல்பாக்கத்துக்கும் இடைப்பட்ட பகுதிகளில் கடல் ஆமைகள் அதிக அளவில் கொல்லப்படுவதற்கு அந்தப் பகுதிகளில் இழுவைப் படகுகளை பயன்படுத்தியும், நீண்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்கள் பிடிக்கப்படுவதும் தான் காரணம் ஆகும். கடற்கரையில் இருந்து 5 கடல் மைல் தொலைவில் தான் கடல் ஆமைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அந்த பகுதிகளில் கடல் ஆமைகள் முட்டையிடும் காலத்தில் இழுவைப் படகுகளையும், நீண்ட வலைகளையும் பயன்படுத்துவதற்கு 1983&ஆம் ஆண்டின் தமிழ்நாடு கடல்பகுதி மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தடை முழுமையாக செயல்படுத்தப்படாதது தான் ஆயிரக்கணக்கில் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் கொத்துக் கொத்தாக கொல்லப்படுவதற்கு முதன்மைக் காரணம் ஆகும்.

இழுவைப் படகுகளால் கடல் ஆமைகள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்கான சிறந்த வழி அவற்றில் கடல் ஆமைகள் சிக்காமல் விலக்கி விடுவதற்கான கருவிகளை (Turtle Excluder Devices -TED) பொருத்துவது தான். அனைத்து இழுவைப் படகுகளிலும் இத்தகையக் கருவிகள் பொருத்தப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். கடல் ஆமைகள் முட்டையிடும் காலம் தொடங்குவதற்கு முன்பாக இழுவைப் படகுகளில் இத்தகைய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவா? என்பதை ஆய்வு செய்ய வேண்டியது அரசின் கடமை. ஆனால், இந்தக் கடமையை தமிழக அரசு ஒருபோதும் செய்வதில்லை என்பது தான் வேதனையான உண்மையாகும்.

ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்காக பல விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாதது தொடர்பான வழக்கில் கடந்த 2017&ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இனிவரும் ஆண்டுகளில் அனைத்து விதிகளையும் முழுமையாக கடைபிடிப்பதாக தமிழக அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியை தமிழக அரசு செயல்படுத்தாததால் தான் ஆயிரக்கணக்கான ஆமைகள் இறந்திருக்கின்றன.

நடப்பாண்டிலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியத்துக்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது. ஆனால், கள அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

உலகில் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதற்கு ஏற்ற கடற்கரைப் பகுதிகள் வேகமாக குறைந்து வருவதால் அவற்றுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. முட்டையிலிருந்து குஞ்சு வருவதற்கு இரு மாதங்கள் ஆகும் என்றும், அவ்வாறு பொறிக்கப்படும் 1000 ஆமைக் குஞ்சுகளில் ஒன்று தான் பருவத்தை அடைவதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் இருக்கும் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளை பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசுக்கும், மக்களுக்கும் உண்டு. அதிலும் பல நாடுகளில் இருந்து நமது விருந்தினர்களாக வரும் ஆமைகளை கொலை செய்வதை மன்னிக்க முடியாது. கடல் ஆமைகளைக் காக்கும் கடமையிலிருந்து தமிழக அரசு தப்பிப்பதற்கு முயலக் கூடாது.

ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய அனைத்து விதிகளும் கடைபிடிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதன் மூலம் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதற்கு மிகவும் பாதுகாப்பான பகுதியாக சென்னை பழவேற்காடு & கல்பாக்கம் இடையிலான கடற்கரையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 11 மாவட்டங்களில் கனமழை, சென்னைக்கான எச்சரிக்கை? சென்யார் புயல் நிலவரம், தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 11 மாவட்டங்களில் கனமழை, சென்னைக்கான எச்சரிக்கை? சென்யார் புயல் நிலவரம், தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
"உனக்கு என்ன பிரச்சினை, போடா!" - சீமானின் ஆவேசப் பேச்சு: கொலை மிரட்டல் வழக்குப் பதிவு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal
விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 11 மாவட்டங்களில் கனமழை, சென்னைக்கான எச்சரிக்கை? சென்யார் புயல் நிலவரம், தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 11 மாவட்டங்களில் கனமழை, சென்னைக்கான எச்சரிக்கை? சென்யார் புயல் நிலவரம், தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
"உனக்கு என்ன பிரச்சினை, போடா!" - சீமானின் ஆவேசப் பேச்சு: கொலை மிரட்டல் வழக்குப் பதிவு!
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
பாகூர் கடம்பேரி ஏரி: சிங்காரி, பங்காரி தியாகம்! வறட்சியில் உயிர்கொடுத்த கதை, ஏரமடி ஐயனாரின் சோகம்!
பாகூர் கடம்பேரி ஏரி: சிங்காரி, பங்காரி தியாகம்! வறட்சியில் உயிர்கொடுத்த கதை, ஏரமடி ஐயனாரின் சோகம்!
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
Smriti Mandhana: ஸ்மிரிதி மந்தனா அப்பாவுக்கு என்னதான் பிரச்சினை? மருத்துவர் சொல்வது என்ன?
Smriti Mandhana: ஸ்மிரிதி மந்தனா அப்பாவுக்கு என்னதான் பிரச்சினை? மருத்துவர் சொல்வது என்ன?
Embed widget