மேலும் அறிய

100 Days of MK Stalin: திமுக அரசின் முதல் 100 நாட்கள் எப்படி இருந்தன?

மாநிலத்தின் 52.7 சதவீத வாக்காளர்கள் திமுக அரசின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்

கடந்த 100 நாட்களில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசின் ஒட்டுமொத்த செயல்திறன் சிறப்பாக அமைந்ததுள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

கடந்த சட்டபேரவைத் தேர்தலில் வாக்களித்த 4,516 வாக்காளர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை சிவோட்டர் குழுமத்துடன் இணைந்து ஏபிபி நாடு செய்தி நிறுவனம் வெளியிட்டது.  

திமுக அரசின் முதல் 100 நாட்கள் எப்படி இருந்தன?  

  மிகச் சிறப்பு  சிறப்பு  சரசாரி  மோசம்  பதில் இல்லை  மொத்த எண்ணிக்கை 
அதிமுக + பாஜக கூட்டணி  58.0%   17.7% 11.4%  7.0% 6.0%   100.0%
திமுக + காங்கிரஸ் கூட்டணி  57.0%     26.8% 8.1% 5.3% 2.8% 100.0%
 அமமுக  26.4%     25.0% 33.3% 4.2% 11.1% 100.0% 
 மக்கள் நீதி மய்யம் 21.1%   19.7% 8.5% 42.3% 8.5%    100.0%
நாம் தமிழர்  26.6%     17.3% 15.0% 11.0% 30.1% 100.0%
இதர கட்சிகள்   29.9%   27.3% 15.6% 18.2%   9.1%  100.0%
மொத்தம்  52.7%    22.3% 10.8%  7.7%  6.4% 100.0%

'ஏபிபி நாடு' செய்தி தளம் நடத்திய ஆய்வின் படி, 52.7 சதவீத வாக்காளர்கள் திமுக அரசின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருந்தது என்று தெரிவித்துள்ளனர். 22.3% வாக்காளர்கள் மு.க ஸ்டாலின் அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். சரசியரியாக 7% பேர் மட்டுமே அரசின் செயல்பாடுகள் மோசமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த 7.7% பேரில், 42.3% பேர் மக்கள் நீதி மய்யம்  கட்சியைச் சேர்ந்தவர்கள்.   

மு.க ஸ்டாலின் அரசின் முதல் 100 நாட்கள்:  தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளே, தலைமைச் செயலாளர் - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளரை வைத்து கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இரண்டு நாள் ஆலோசனையில் மூன்று அறிக்கைகள் வந்தன. மூன்றும் கொரோனா பாதிப்பு கட்டுப்பாடு குறித்து.

ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன் ஈஸ் தி பெஸ்ட் இம்ப்ரெஷன் என்பார்கள். முதலமைச்சரின் முதல் கையெழுத்துதான் அடுத்து வரும் ஐந்தாண்டு ஆட்சிக்குமான ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன் என்னும் நிலையில் பொறுப்பேற்றவுடன் ஐந்து முக்கிய ஆணைகளில் கையெழுத்திட்டிருந்தார் முதலமைச்சர்.

1. கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.4000 
2.ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு
3.  மகளிர், பணிக்குச் செல்லும் பெண்கள், படிக்கும் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் திட்டம் பதவியேற்ற மறுநாளில் இருந்தே அமல்.
4. தேர்தல் பிரச்சாரத்தின்போது பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களில் தீர்வு காண “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்கிற திட்டத்தின் கீழ் துறை உருவாக்கம்
5. அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றாலும் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை செலவுகளை அரசே வழங்கும்.
என அறிவித்தார்.

தொலைநோக்காக 10 அமைச்சரவைகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. மகளிர் உரிமைத்துறையும் நீருக்கென்றே தனியாக நீர்வளத்துறையும் அதில் தவிர்க்கமுடியாத ஹைலைட். முதலமைச்சர் ஆனதற்கு மத்தியிலிருந்து வாழ்த்து வந்தது, ’மத்திய அரசு தோளோடு தோள் நிற்கும்’ என ட்வீட்டில் வாழ்த்திய அமித்ஷாவுக்கு நீங்கள் மத்தி அல்ல ஒன்றியம் என நேரடியாகவே நினைவூட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்.  உறவுக்குக் கைக்கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம் என இந்திரா காந்திக்கு நினைவூட்டிய குரலின் 2.0 வெர்ஷன் அது.  கோவையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்றவர்களை அவெஞ்சர்ஸ் பாணியில் கொரோனா கவசம் அணிந்து நேரடியாகச் சந்தித்தது இந்திய அளவில் ட்ரெண்டானது. அதுவரை வேறு எந்த முதல்வரும் கொரோனா வார்டுக்கு அவ்வாறு அதிரடியாகச் சென்றிருக்கவில்லை. 

அதெல்லாம் சரி? நீட் தேர்வு ரத்து எங்கே எனக் கட்டைவிரல் உயர்த்திக் கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலடியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான நீட் ஆய்வுக் கமிட்டியை நிறுவினார் முதலமைச்சர். தெய்வ வழிபாட்டை எதிர்க்கும் திராவிடக் கொள்கையில் முளைத்த கட்சி இந்த நூறு நாட்களில் அதிகம் செயலாற்றியது என்ன இந்து சமய அறநிலயத்துறையில்தான். அன்னைத்தமிழில் அர்ச்சனை, பெண் அர்ச்சகர்களுக்கான பயிற்சி அறிவிப்பு, அதிரடியாக மீட்கப்பட்ட ரூ 626 கோடி மதிப்பிலான 187 ஏக்கர் நிலங்கள் என  இந்தப் பட்டியல் சற்றே பெரிது.  

உண்மையைச் சொல்லப்போனால் ஒருநாள் முதல்வர் பாணியில் அமைந்த முதல்வன் திரைக்கதைதான் தமிழ்நாடு அரசின் இந்த நூறு நாட்கள். எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி என முன்னாள் அமைச்சர்கள் மீதான அதிரடி ரெய்டு, ஸ்டெர்லைட் போராட்டம் அவதூறு வழக்குகள் என முன்னாள் ஆட்சிகளில் போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து, பிளஸ்டூ தேர்வு ரத்து, பத்திரிகையாளர்களும் முன்களப்பணியாளர்களாக அறிவிப்பு, முன்களப்பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை, கொரோனாவில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு வைப்புத்தொகை எல்லாம் செஞ்சூரியை நோக்கி வீறுநடை போடவைத்த பவுண்ட்ரி ஷாட்கள்.

திராவிடக் கட்சிகளின் ஆட்சி என்றாலே சுகாதாரத்துறையில் சூப்பர் திட்டங்களை எதிர்பார்க்கலாம் என்பது இந்த ஆட்சியிலும் சோடை போகவில்லை. ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என மருத்துவம் நுழையாத ஊர்களுக்கும் வீட்டுக்கே சென்று மருத்துவம் பார்க்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர். நூறு நாட்கள் நூற்றுக்கு நூறு பெற்றிருந்தாலும் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு இந்த மதிப்பெண் நீடிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget