மேலும் அறிய

'விசாரணையே நடத்தவில்லை.. இது பொய்யான வழக்குப்பதிவு..' மருமகள் விவகாரத்தில் குமுறும் பா.ம.க. எம்.எல்.ஏ..!

குடும்ப பிரச்சனையில் பக்குவம் இல்லாமல் தனது மருமகள் போலீசை நாடி உள்ளதாகவும், வழக்கறிஞரின் பேச்சைக் கேட்டு பொய்யாக புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் அவரது மகன் சங்கருக்கும் சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த மனோவியா என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக பெண் வீட்டார் 5 கோடி ரூபாய் பணம், 25 லட்சம் மதிப்பிலான சொகுசு கார், 200 பவுன் நகை ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்து திருமணத்தை பிரமாண்டமாக நடத்தியுள்ளனர்.

எம்.எல்.ஏ. மகன்:

திருமணமான சில மாதங்களிலேயே சட்டமன்ற உறுப்பினர் சதாசிவத்தின் மகன் சங்கர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்குள் பல்வேறு பிரச்சனைகள் வர ஆரம்பித்தவுடன் சங்கர் நான் இப்படித்தான் நீ வேண்டுமென்றால் உங்கள் வீட்டிற்கு சென்று விடு என கூறி தாக்கியுள்ளார். 

விசாரணையே நடத்தவில்லை.. இது பொய்யான வழக்குப்பதிவு..' மருமகள் விவகாரத்தில் குமுறும் பா.ம.க. எம்.எல்.ஏ..!

இதனை அடுத்து இச்சம்பவத்தை பெரிது படுத்தாமல் மன வேதனையுடன் சங்கர் உடனே ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் நாளுக்கு நாள் சங்கரின் நடவடிக்கை பெண்களை வீட்டுக்கு அழைத்து வரும் வரை வளர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் மனோவியாவிடம் அவ்வப்போது நகை, பணம் கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். சங்கரின் மனைவி இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினரும் மாமனாருமான சதாசிவத்திடம் தெரிவித்துள்ளார்.

வரதட்சணை புகார்:

ஆனால் அதனை ஏதும் பெரிது படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மனோவியா வீட்டிலிருந்து புறப்பட்டு சர்க்கார் கொல்லப்பட்டியில் வசித்து வரும் அவரது வீட்டிற்கே திரும்பிச் சென்றார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாய் தந்தையிடம் கூறிய மனோவியா சேலம் மாநகர் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை சம்பந்தமான புகாரை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர் மகன் சங்கர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பெண்ணுக்கு மிரட்டல்:

இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மகன் சங்கர் மனைவி மனோவியாவை மிரட்டும் நோக்கத்தில் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு நீ கொடுத்த புகாரை திரும்ப பெறவில்லை என்றால் உன்னுடைய ஆபாச வீடியோக்கள் என்னிடம் உள்ளதாகவும், அதனை வெளியிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மனோவியா கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மீண்டும் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் அவரது மனைவி பேபி மகள் கலைவாணி மகனும் எனது கணவருமான சங்கர் ஆகியோர் என்னிடம் தொடர்ந்து. வரதட்சனை கேட்டு கொடுமை செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அது மட்டுமல்லாமல் கொடுத்த புகாரை திரும்ப பெறவில்லை என்றால் தன்னுடைய ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி வருவதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் அவரது மனைவி பேபி, மகள் கலைவாணி, மகனும் எனது கணவருமான சங்கர் ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், வரதட்சணை கொடுமை கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளுக்கு வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையே நடத்தவில்லை.. இது பொய்யான வழக்குப்பதிவு..' மருமகள் விவகாரத்தில் குமுறும் பா.ம.க. எம்.எல்.ஏ..!

பொய் வழக்குப்பதிவு:

இந்த நிலையில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, குடும்ப பிரச்சனையில் பக்குவம் இல்லாமல் தனது மருமகள் போலீசை நாடி உள்ளதாகவும், வழக்கறிஞரின் பேச்சைக் கேட்டு பொய்யாக புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த புகாரின் மீது காவல்துறையினர் விசாரிக்காமலேயே பொய்யாக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டிய சதாசிவம், தொகுதி பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் குடும்ப பிரச்சினைகளை பார்க்க முடியவில்லை என விளக்கமளித்தார். மேலும் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போலீசார் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget