மேலும் அறிய

இணையத்தில் டிரெண்டாகும் சேலம் 'கியூ' வீடியோ - டாஸ்மாக் மூடியதால் தனியார் பார்களில் முண்டியடித்த கூட்டம்

சேலத்தில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு எதிரொலியால் தனியார் பார்களில் மது விற்பனை அமோகம். நீண்ட கியூ வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்ற மது பிரியர்கள்.

சேலத்தில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் முறையைக் கைவிடக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் மூன்று நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மனமகிழ் மன்றத்தில் மதுவை வாங்க மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் முறையைக் கைவிட வேண்டும் மற்றும் கடைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சேலம் மாவட்டத்தில் 174 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தால், மதுபிரியர்கள் மதுவை வாங்க மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

 

இந்த நிலையில், டாஸ்மாக் கடைகள் அடைப்பு எதிரொலியால் சேலத்தில் இன்று தனியார் பார்களில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. மது பிரியர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். 


இணையத்தில் டிரெண்டாகும் சேலம் 'கியூ' வீடியோ - டாஸ்மாக் மூடியதால் தனியார் பார்களில் முண்டியடித்த கூட்டம்

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் (மனமகிழ் மன்றம்) பாரில் இன்று காலை திரளான மது பிரியர்கள் வந்து கியூ வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். வழக்கமாக சேலத்தில் உள்ள பல்வேறு 11  டூ 11 பார்களிலும் மது வகைகள் விற்கப்பட்டு வருகிறது. இந்த 11 டூ 11 பார்கள் பகல் 11 மணிக்கு திறந்து இரவு 11 மணிக்கு மூடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக டாஸ்மாக் மதுபான கடைகள் சேலம் முழுவதும் மூடப்பட்டுள்ளதால் தற்போது தனியார் பார்களிலும் மற்றும் 11 டூ 11 பார்களிலும் அதிகம் கூட்டம் கூட தொடங்கி இருக்கிறது. ஆனால், மனமகிழ் மன்றத்தில் உறுப்பினர்களுக்கு மட்டுமே மதுவை விற்பனை செய்ய வேண்டும் என்ற நிலையில் வெளியாட்களும் மது வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.

முதலமைச்சர் விஜய்க்கு மனு அளித்த டாஸ்மாக் ஊழியர்கள்

சில தினங்களுக்கு முன்பு, தமிழகத்தில் அண்மையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த பணியாளர்கள் அனைவருக்கும் அரசின் பிற துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் பணி அமர்த்த வலியுறுத்தி சேலம் மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி இருந்தனர்.

இதையும் படிங்க: "கொஞ்சி வாக்கு கேட்டீங்களே.. அந்த குழந்தைகளுக்கு இன்று பாதுகாப்பில்லை - முதல்வர் விஜய்யை உலுக்கிய இபிஎஸ்

தமிழ்நாடு முழுவதும் வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் கல்விக் கூடங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை தமிழ்நாடு அரசு மூடிய நிலையில் மூடப்பட்ட மதுபான கடைகளில் பணிபுரிந்து வந்த பணியாளர்கள் அனைவருக்கும் அரசின் பிற துறைகளில் உள்ள காலி பணியிடங்களில் பணியமர்த்த வேண்டும் என டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர். மேலும் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தினை தனியார் முகமை ஏற்படுத்தி அதன் மூலம் செயல்படுத்த வேண்டும், மதுபான கடைகளை இரவு 10 மணிக்கு மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் விற்பனை கணக்குகளை சரி பார்த்து வெளியே செல்ல பணியாளர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு மனு அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தலைப்பு செய்திகள்

இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
VinFast VF5: சிங்கிள் சார்ஜில் 326 கிமீ மைலேஜ்.? நெக்ஸானுக்கு நெருக்கடி கொடுக்குமா வின்ஃபாஸ்ட் EV.? விலை என்ன.?
சிங்கிள் சார்ஜில் 326 கிமீ மைலேஜ்.? நெக்ஸானுக்கு நெருக்கடி கொடுக்குமா வின்ஃபாஸ்ட் EV.? விலை என்ன.?
Embed widget