மேலும் அறிய

Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (06.05.2025) எங்கெல்லாம் மின்சாரம் நிறுத்தம் - முழு விவரம் இதோ

Salem Power Shutdown (06.05.2025): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை கடந்த ஒரு வாரமாக வெயிலின் அளவு 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவாகி உள்ளது. நேற்றைய தினம் சேலம் மாவட்டத்தில் 102 டிகிரி வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பகல் நேரங்களில் வெப்ப காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டுவதில் சிக்கல் ஏற்படுகிறது. நேற்று முதல் அக்னி வெயில் தொடங்கியுள்ள நிலையில், நேற்று இரவு சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இருப்பினும் பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிக அளவில் உள்ளது.

மேலும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மதிய நேரங்களில் பொதுமக்கள் குளிர்பானங்களை தவிர்த்து இளநீர், தர்பூசணி, நொங்கு உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், கோடை காலங்களில் மாதாந்திர பராமரிப்பிற்கான மின்தடையை தமிழ்நாடு மின்சார வாரியம் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 06-05-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நாளைய மின்தடை பகுதிகள்:

கந்தம்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை. 

சிவதாபுரம், பனங்காடு, ஆண்டிப்பட்டி, சத்யா நகர், எம்.ஜி.ஆர் நகர், கிழக்கு வட்ட மேல்காடு, கொத்தனூர், கன்னி மாரியம்மன் கோவில், செம்மண்சிட்டு, கணவாய்காடு, பெருமாம்பட்டி, பூச பூசநயக்கனூர், தும்பாதூளிப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

இன்றைய மின்தடை பகுதிகள்:

கந்தம்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை. 

மூலப் பிள்ளையார் கோவில், பனங்காடு கிருஷ்ணப்பா தியேட்டர், கொத்தாங்காடு, கந்தம்பட்டி ஹவுசிங் போர்டு, அழகிரி வட்டம், கந்தம்பட்டி ஆர்டிஓ அலுவலகம், சிவதாபுரம், காளியம்மன் கோவில், சண்முகம் செட்டிக்காடு, வண்டிக்காரன் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

தலைப்பு செய்திகள்

Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget