MLA Letter to Public: இப்படியும் ஒரு எம்.எல்.ஏ-வா? மக்களுக்கு எழுதிய கடிதம் - யார், எதற்கு தெரியுமா?
நகராட்சி நிர்வாகத்துறை மானிய கோரிக்கையில் பேச கருத்துக்களை, தேவைகளை தெரிவிக்க எம்.எல்.ஏ அலுவலகத்தில் 23.03.2025 எனக்கு ஆலோசனை தர எம்எல்ஏ அலுவலகம் வாருங்கள் என எம்எல்ஏ அருள் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பொது பட்ஜெட் மார்ச் 14ஆம் தேதி நடைபெற்ற நிலையில், மார்ச் 15ஆம் தேதி வேளாண் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது பட்ஜெட் மீதான விவாதங்கள் மற்றும் மானிய கோரிக்கைகள் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வருகின்ற மார்ச் 25ஆம் தேதி நகராட்சி நிர்வாக துறையின் மானிய கோரிக்கைகள் நடைபெற உள்ளது. இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிக்கான அடிப்படை பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை முன் வைத்து பேசுவார்கள். நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கைக்காக சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராகி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதியின் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் தனது தொகுதி மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில், "அன்பிற்குரிய சேலம் மேற்கு தொகுகி வாக்காளர்களாகிய என்னை வாழ வைக்கும் தெய்வங்களே...
கேலம் மாவட்ட மக்களே... வணக்கம்.
வரும் 25.3.2025 செவ்வாய்கிழமை நகராட்சி நிர்வாகத்துறை மானிய கோரிக்கையில் உங்கள் சார்பாக சட்டமன்றத்தில் பேச உள்ளேன். அதில் பேச உங்கள் கருத்துக்களை, தேவைகளை எனக்கு தெரிவிக்க சூரமங்கலம் எம்.எல்.ஏ அலுவலகத்தில் எனக்கு கருத்து வழங்க 23.03.2025 காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை எனக்கு ஆலோசனை தர வாருங்கள் நேரில் வர முடியாதவர்கள் கீழ்கண்ட மின் அஞ்சல் முகவரியில் (arulmlasalemwest@gmail.com salemarulpmk@gmail.com) தெரிவக்கவும்" என குறிப்பிட்டுள்ளார்.
சேலம் மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக, எம்எல்ஏ அருள் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் நடமாடும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வைத்துள்ளார். அதன் மூலம் தினசரி பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டுள்ள கார் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று வருவர். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் அருள் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

