அண்ணாமலை பங்கேற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு - என்ன நடந்தது?
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சால்வை போடுவதற்கு வந்த நிர்வாகியிடமிருந்து கே.பி.ராமலிங்கம் பறித்த போது நிர்வாகி தடுமாறி கீழே விழ சென்றதால் பரபரப்பு.

சேலம் மாநகர் ஐந்து ரோடு பகுதியில் பாஜக மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் வருகை தந்திருந்தார். அவருடன் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் வருகை தந்தார். அப்போது பாஜக கட்சியினர் மேலே நிற்கவேண்டாம் கீழே செல்லுமாறு மிரட்டல் விடுவது போன்றும், பாஜகவின் முன்னாள் மாவட்ட பார்வையாளர் முருகேசன் என்பவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சால்வை போடுவதற்கு காத்திருந்தார். அப்பொழுது வேகமாக சென்ற கே.பி.ராமலிங்கம் அவரது சால்வையை பிடுங்கி போது கீழே விழுவது போன்று நிலைத்தடுமாறினார். பாஜகவினரிடையே பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கத்தின் செயல்பாடு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினர் கே.பி.ராமலிங்கத்தின் செயல்பாட்டை கண்டித்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு முன்பாக, பிரதமர் மோடியின் 74ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சேலம் மாநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பாஜக மாநில விவசாய அணி செயலாளர் பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கலம் கலந்து கொண்டு 4000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர் மாவட்ட பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சிக்கு பின்னர் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு மிக பிரம்மாண்டமாக நான்காயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது என்றார். இது பாஜக நிகழ்ச்சியா? அல்லது தனியார் நிகழ்ச்சியா? என்ற கேள்விக்கு, பாஜகவை சேர்ந்த ஒருவர் நடத்தும் நிகழ்ச்சி. பாஜக நிகழ்ச்சி தான் என பதிலளித்தார். தொடர்ந்து, பாஜக சேலம் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்காதது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அது சில்லற தனமான விஷயம். அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை. பாத்ரூம் போய் இருக்காரு. அப்படி விட்டு விடுங்கள் என்று மாநகர நிர்வாகிகளை தரைக்குறைவாக பேசினார். மேலும், 4000 பேர் பங்கேற்று உள்ள நிகழ்ச்சியில் வெறும் 4 பேரை பற்றி பேச வேண்டாம். பிஜேபியின் யார் மக்கள் பணியாற்ற வந்திருப்பவர்களை உயர்த்துவது தான் பாரதிய ஜனதா கட்சி. அதுதான் பிரதமர் விரும்புகிறார். அவர்களாக முன்வந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். இல்லாதவர்கள் போய்விடுங்கள் என்று பேசினார்.
பாஜகவின் மாநில துணைத்தலைவரின் இந்த பேச்சு சேலம் மாநகர நிர்வாகிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியது. கே.பி.ராமலிங்கம் மீண்டும் சேலத்திற்கு வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன் பின்னர், சேலம் மாநகர் மாவட்ட பாஜகவினர் எந்த நிகழ்ச்சிக்கும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும், பாஜக மாநிலத் துணைத் தலைவருமான கே.பி. ராமலிங்கத்தை சேலம் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் அழைப்பது இல்லை. தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் வந்த கே.பி.ராமலிங்கம், நிர்வாகிகளிடம் கடுமையாக நடந்து கொண்ட சம்பவம் பாஜகவின் மத்தியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

