மேலும் அறிய

பாஜக ஆயுதமே இதுதான்... இதைவைத்து அதிமுகவை மிரட்டுகிறார்கள் - எம்பி செல்வகணபதி

செங்கோட்டையனை அழைத்து அதிமுக பொதுச்செயலாளர் நீங்கள் தான் மற்றும் இரட்டை இலை சின்னத்தை முடக்குவேன் என்றால் எடப்பாடி பழனிசாமி என்ன செய்வார் பயப்படாமல் இருப்பாரா என்றும் சேலம் எம்.பி செல்வகணபதி கேள்வி.

சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, கிராமப்புற 100 நாள் வேலைவாய்ப்பை மட்டுமே வாழ்வாதாரமாக கருதி உழைப்பை கொடுத்துக் கொண்டிருக்கின்ற பெண்களுக்கு ஐந்து மாதங்களாக உரிய சம்பளத்தை மத்திய அரசு கொடுக்கவில்லை. மாநில அரசு தங்களது பங்கை முழுமையாக கொடுத்துவிட்ட நிலையிலும், மத்திய அரசுக்கு தமிழ்நாட்டின் முதல்வர் கடிதம் வாயிலாக வலியுறுத்தியும் கூட மத்திய அரசு செவி சாய்க்க வில்லை. தமிழகத்தில் ஒவ்வொரு கிராமங்களிலும் 30 லட்சம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திற்கு மட்டும் 4034 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டிய உள்ளது. ஐந்து மாத சம்பளம் வழங்காத அசாதாரண நிலை உள்ளது. இந்த மோசமான சூழ்நிலை குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பி நிலையிலும் திமுக மற்றும் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராடியும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்பது கண்டனத்திற்குரியது என்றார். இது தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின்போது திமுக குழு தலைவர் கனிமொழி அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அந்த துறையின் அமைச்சர் மௌனம் சாதித்தார். இந்த சம்பளம் எப்பொழுது மக்களுக்கு வழங்கப்படும் என்று தெளிவு படுத்தப்படவில்லை என்றார்.

பாஜக ஆயுதமே இதுதான்... இதைவைத்து அதிமுகவை மிரட்டுகிறார்கள் - எம்பி செல்வகணபதி

தமிழகத்தில் கிட்டத்தட்ட 91 லட்சம் பெண்கள் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 91 லட்சம் பேர் ஊழியர்களில் 86 சதவீதம் பெண்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். 26 சதவீதம் பட்டியலினத்தை சேர்ந்த பெண்களும், மாற்றுத்திறனாளிகள் ஒரு லட்சம் பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து எடுத்துக் கூறியும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் செயலில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. தமிழகம் வறுமை ஒழிப்பு திட்டத்தில் முதல் மாநிலமாக உள்ளது. அதை சீர் குறைக்கும் வகையில் திட்டமிட்டு, தீய எண்ணத்தில் சம்பளத்தை 5 மாதமாக நிறுத்தி வைத்துள்ளது. தமிழகத்திற்கு தான் அதிகமாக 4034 கோடி ரூபாய் பணத்தை நிறுத்தி வைத்துள்ளது. தமிழக அரசு நிதி சுமையிலும் தங்களுடைய பங்கை வெளியிட்டுள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக சம்பள ஊதியத்தை விடுவிக்க வேண்டும் என்று திமுக சார்பாக வன்மையான கண்டனத்துடன் கோரிக்கை வைப்பதாக கூறினார். நிதியை விடுவிக்காவிட்டால் வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரித்தார் விடுத்தார்.

தமிழகத்தில் வளர்ச்சி, மக்களின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு மேலாக தொகுதி மறுவரையறை சீரமைப்பு திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது. வருங்காலத்தில் தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்கள் பாதிக்கும் என்று தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார்கள். அழைப்பு விடுத்ததன் அடிப்படையில் 58 கட்சிகள் கலந்து கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று பேசினார்.

மேலும் ஏடிஎம் என்பது எப்பொழுது வேண்டுமென்றால் பணம் எடுக்கலாம்; அந்தக் கட்டணத்தையும் உயர்த்தி உள்ளவர்கள். ஒவ்வொரு முறையும் 23 ரூபாய் செலுத்த வேண்டும் எத்தனை முறை எடுக்க வேண்டும் என்று அதையும் குறைத்துள்ளார்கள். மக்களை தாக்கும் வகையில் இந்த செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு மக்களிடம் இருந்து கொள்ளையடிப்பதற்கு தான், இதுபோன்ற செயல் ஈடுபட்டு வருகிறார்கள். சாதாரண மக்கள்தான் ஏடிஎம்-ஐ பயன்படுத்தி வருகிறார்கள். 

மேலும் பல சுங்கசாவடிகளில் ஒப்பந்த காலங்கள் முடிவடைந்துவிட்டது. தற்பொழுது சுங்கசாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. காலாவதியான சுங்கசாவடிகள் நீக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சுங்கசாவடிகள் இருக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளோம். சாலை கட்டணம் கட்டியும், சாலைகளை பழுது பார்ப்பதில்லை. இந்த சுங்கசாவடிகளால் சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்களை பாதிக்கும். மத்திய அரசு ஏழைக்கான அரசாக இல்லை. அதானி, அம்பானி ஆகிய இரண்டு குடும்பங்களுக்கு மட்டுமே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என விமர்சனம் செய்தார்.

மத்திய அரசுக்கு ஏழை, எளிய மக்களை பற்றி கவலை இல்லை. பண மதிப்பிழப்பு செய்ததிலிருந்து இந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பொருளாதார உயர்வு அகல பாதாளத்தில் இருந்து வருகிறது. பிரதமர் மோடி நன்றாக பேசுகிறார். வளர்ச்சிக்கு நாட்டிற்கு முதலாவதாக இருப்பது விவசாயம் தான் என்று பிரதமர் கூறுகிறார். ஆனால் விவசாயத்திற்கு பட்ஜெட்டில் நிதி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைத்து உள்ளார்கள். மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக நான்கு ஐந்து மாநிலங்களை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு மட்டும் நிதியை வழங்கி, அவர்களிடமிருந்து ஓட்டுகளை பெற்று தொகுதி மறுசீரமைப்பில் உள்ள தொகுதிகளை அதிகப்படுத்துவதை வைத்துக்கொண்டு ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற அஜந்தாவின் தான் பாஜக உள்ளது. ஒரு தெளிவான பார்வை இல்லாத அரசு பாஜக அரசு. இந்த அரசு நீக்கப்படுகின்ற போது தான் முழுமையான பொருளாதார சுதந்திரம் கிடைக்கும் எனவும் பேசினார்.

பாஜக ஆயுதமே இதுதான்... இதைவைத்து அதிமுகவை மிரட்டுகிறார்கள் - எம்பி செல்வகணபதி

தமிழ்நாடு, தமிழர்கள் வஞ்சிக்கின்ற சூழ்நிலையிலும் நம்மூர் தலைவர் கூட்டணி வைத்துக் கொள்வதற்காக கைகட்டி, வாய் பொத்தி அமர்ந்திருக்கிறார் என்று பார்க்கும்போது, இவர்களெல்லாம் மக்களுக்கு பணியாற்றுவீர்களா? எந்த சூழ்நிலையில் மத்திய அரசுடன் கைகோர்க்க போகிறார்கள் என்று மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பாஜக உடைய எதிர்காலம் மற்ற மாநிலங்களில் இரண்டு எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு ஆட்சி அமைப்பது. அதிமுகவை கபளீகரம் செய்து அந்த இடத்திற்கு பாஜக வர வேண்டும் என்பதுதான் திட்டம். இதை தான் மகாராஷ்டிரா, ஒரிசாவில் ஆகிய மாநிலங்களில் செய்தார்கள். தற்போது பீகாரில் செய்யப் போகிறார்கள் திட்டமிட்டுள்ளனர். அங்குள்ள கட்சிகளை உடைத்து சீர்குலைத்துள்ளனர். பாஜக வைத்துள்ள ஆயுதமே வருமானவரித்துறை, சிபிஐயும் தான். இதை வைத்துக் கொண்டுதான் அதிமுகவை மிரட்டுகிறார்கள். அடுத்த நாளை செங்கோட்டையனை அழைத்து அதிமுக பொதுச்செயலாளர் நீங்கள் தான் மற்றும் இரட்டை இலை சின்னத்தை முடக்குவேன் என்றால் எடப்பாடி பழனிசாமி என்ன செய்வார் பயப்படாமல் இருப்பாரா என்றும் கேள்வி எழுப்பினர்.

பாஜகவுடன் மட்டும் உறவு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இனி எங்கு முகத்தை அதிமுக வைத்துக் கொள்ளும். டெல்லியில் கட்சியின் கட்டிடத்தை பார்க்க செல்கிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி சென்று, மூன்று கார் மாறி சென்று அமித்ஷாவுடன் சந்திக்கிறார். அடுத்த நாள் செங்கோட்டையன், நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசுகிறார். இது அதிமுக கட்சி விவகாரம் அதுக்குள் போக விரும்பவில்லை என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக இருக்கிறதா? மத்தியில் உள்ள ஆட்சி தமிழகத்தை சீர்குலைத்து கொண்டுள்ளது அத்துடன் பேச்சுவார்த்தை என்பது எந்த விதத்தில் நியாயம். இதனை நாட்டு மக்கள் உற்று கவனிப்பார்கள் என்றும் கூறினார்.

இன்னும் 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை நிறுத்தி வைக்கிறேன் என்று சொல்லாமல், 848 தொகுதிகள் அதிகரித்து வைத்துவிட்டு, தொகுதி மறு வரையறை சீரமைப்பு வராது என்றும் ஜீரோ சதவீதம் மாறாது என்று சொல்வது யாரை ஏமாற்றும் வேலை என்று கேள்வி எழுப்பினார். மக்கள் தொகை அடிப்படையில் செய்யவில்லை. அதற்கும் சட்டதிருத்தம் கொண்டு வருகிறேன் என்று அமித்ஷாவே சொல்லட்டும். பாஜக இது குறித்து தெளிவாக எதுவும் பேசுவதில்லை பூசி மழுப்புகிறார்கள். இதற்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதற்கு காரணம் இதில் எதிர்காலத்தில் தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் தமிழகத்தின் குரல் முழுமையாக ஒழிக்கப்படும் என்பதற்காக தான் என்றும் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget