மேலும் அறிய

ஆக்கிரமிக்கப்பட்ட நடைபாதை... பொதுமக்கள் தொடர் புகாரையடுத்து சேலம் மாநகராட்சி அதிரடி

சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.

சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் புறநகர் பகுதிகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இது மட்டுமின்றி நாமக்கல், கள்ளக்குறிச்சி, தர்மபுரி உள்ளிட்ட சிறிய மாவட்டங்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு செல்வதற்கு சேலம் மத்திய பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பேருந்து நிலைய வளாகத்தில் பயணிகளின் வசதிக்காக தேநீர் கடைகள், சிற்றுண்டி, பழ கடைகள் என 150 கடைகள் வைக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் கடை உரிமையாளர்கள் மாநகராட்சி நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்ததால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். 

ஆக்கிரமிக்கப்பட்ட நடைபாதை... பொதுமக்கள் தொடர் புகாரையடுத்து சேலம் மாநகராட்சி அதிரடி

இதுகுறித்து சேலம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்ததையடுத்து ஏற்கனவே நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தொடர்ந்து ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடைபாதைகளை ஆக்கிரமித்து பயணிகளுக்கு இடையூறாக வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் தலைமையிலான அதிகாரிகள் போலீசார் துணையோடு நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது வியாபாரிகள் சிலர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த சிலிண்டர், ஃப்ரிட்ஜ், பிஸ்கட், கூல்ட்ரிங்க்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், வாட்டர் பாட்டில்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் மாநகராட்சி வாகனத்தில் ஊழியர்கள் அள்ளிச்சென்றனர்.

இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் கூறும் போது, தற்போது ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வணிகர்கள் மாநகராட்சி நிர்வாகம் விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடித்து கடைகளை நடத்த வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வணிகர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதையும் மீறி மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடைக்கான அனுமதி ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.

ஆக்கிரமிக்கப்பட்ட நடைபாதை... பொதுமக்கள் தொடர் புகாரையடுத்து சேலம் மாநகராட்சி அதிரடி

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஏராளமான கடைகள் இயங்கி வருகிறது. இதனால் எப்போதும் பயணிகள் நடைபாதையில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகின்றது. அதிகாரிகள் மாதம் ஒருமுறை இது போன்று ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்றனர். ஆனால் அன்று மாலை அல்லது மறுநாள் காலைக்குள் மீண்டும் நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைத்து விடுகின்றனர் என்று குற்றம் சாட்டினர். எனவே நிரந்தரமாக இதற்கு தீர்வு காண மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள உணவு கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்தது. உடனடியாக மத்திய பேருந்து நிலையத்திற்குச் சென்று உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் காலாவதியான மற்றும் தேதி குறிப்பிடப்படாமல் இருந்த தண்ணீர் பாட்டில்கள், கூல் ட்ரிங்ஸ் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் காலாவதியான மற்றும் தேதி குறிப்பிடப்படாமல் பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு நிலவியது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கத்திக்குத்து நடந்த இடத்திற்கே சென்ற துணை முதல்வர்” மருத்துவமனையில் உதயநிதி அதிரடி ஆய்வு..!
Doctors Strike: அச்சச்சோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்ட்ரைக் - பகீர் கிளப்பும் பின்னணி!
Doctors Strike: அச்சச்சோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்ட்ரைக் - பகீர் கிளப்பும் பின்னணி!
Exclusive : “அதிமுக, தவெகவை பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி?” ஜி.கே.வாசன் பிரத்யேக பேட்டி..!
Exclusive : “அதிமுக, தவெகவை பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி?” ஜி.கே.வாசன் பிரத்யேக பேட்டி..!
Breaking News LIVE 13 Nov :  சென்னை, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், மருத்துவருக்கு கத்திக்குத்து
Breaking News LIVE 13 Nov : சென்னை, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், மருத்துவருக்கு கத்திக்குத்து
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Seeman NTK : சீமானுக்கு ஆப்புவைக்கும் ஆடியோ! உளவுத்துறைக்கு அதிரடி டாஸ்க்! சிக்கலில் நாம் தமிழர்Guindy doctor stabbed : அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து! HOSPITAL-ல் பகீர்! வட மாநிலத்தவர் கொடூரம்Hosur Fake Doctors : ’’10th படிச்ச நீ டாக்டரா?’’ டோஸ் விட்ட அதிகாரிகள்! வசமாய் சிக்கிய பெண்கள்Aarthi IAS Profile : வாங்க ஆர்த்தி IAS...அழைத்த உதயநிதி! DEPUTY CM-ன் துணை செயலாளர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கத்திக்குத்து நடந்த இடத்திற்கே சென்ற துணை முதல்வர்” மருத்துவமனையில் உதயநிதி அதிரடி ஆய்வு..!
Doctors Strike: அச்சச்சோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்ட்ரைக் - பகீர் கிளப்பும் பின்னணி!
Doctors Strike: அச்சச்சோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்ட்ரைக் - பகீர் கிளப்பும் பின்னணி!
Exclusive : “அதிமுக, தவெகவை பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி?” ஜி.கே.வாசன் பிரத்யேக பேட்டி..!
Exclusive : “அதிமுக, தவெகவை பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி?” ஜி.கே.வாசன் பிரத்யேக பேட்டி..!
Breaking News LIVE 13 Nov :  சென்னை, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், மருத்துவருக்கு கத்திக்குத்து
Breaking News LIVE 13 Nov : சென்னை, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், மருத்துவருக்கு கத்திக்குத்து
Jharkhand Polls: ஜார்ஜ்கண்டில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு, 1.37 கோடி வாக்காளர்கள், பிரியங்கா வசமாகுமா வயநாடு?
Jharkhand Polls: ஜார்ஜ்கண்டில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு, 1.37 கோடி வாக்காளர்கள், பிரியங்கா வசமாகுமா வயநாடு?
KL Rahul : சிஎஸ்கேவில் விளையாட ரெடி.. ராகுல் கொடுத்த மறைமுக ஹிண்ட்
KL Rahul : சிஎஸ்கேவில் விளையாட ரெடி.. ராகுல் கொடுத்த மறைமுக ஹிண்ட்
சிவ பக்தர்களே!
சிவ பக்தர்களே! "குழந்தை வரம் முதல் மன நிம்மதி வரை" ஐப்பசி அன்னாபிஷேகத்தில் இத்தனை நன்மையா?
TN Rain Alert: மயிலாடுதுறை, கடலூர், அரியலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
TN Rain Alert: மயிலாடுதுறை, கடலூர், அரியலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
Embed widget