Crime: சேலம் மத்திய சிறையில் திருநங்கைகள் அறைக்குள் சென்றதை தட்டி கேட்டதால் காவலரை தாக்கிய கைதி
காவலரை தாக்கிய கைதி உறவினர்களை சந்திக்க மூன்று மாதம் தடை விதித்து விதித்து சிறை கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு.
சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் மத்திய சிறை அமைந்துள்ளது. இங்கு பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேலம் மாநகர் பள்ளப்பட்டி பகுதியில் வழிபறியின் ஈடுபட்ட 21 வயதான இரண்டு திருநங்கைகள் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முறையாக அறுவை சிகிச்சை செய்திருந்தால் தான் பெண்கள் சிறையில் அடைக்கப்படுபவர்கள்.
அவ்வாறு இல்லாத பட்சத்தில் அரசு மருத்துவர்கள் சான்றிதழ்படி மத்திய சிறையில் தனியறையில் வைக்கப்படுவார்கள். இதன்படி இரண்டு திருநங்கைகளையும் தனித்தனி அறையில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாலை திருநங்கை ஒருவர் 1வது பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்தார். அதேபோல் ஐந்தாவது பிளாக்கில் தகாத உறவு காதலியை கொடூரமாக வாழப்பாடி நினைத்துக் கொண்ட நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சேர்ந்த வல்லரசு என்பவரும் அடைக்கப்பட்டிருந்தார்.
அவர் திடீரென திருநங்கையின் அறைக்குள் புகுந்த அவரைப் பார்த்த திருநங்கை வீதியில் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். அந்த நேரம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த முதன்மை செந்தில் ஓடி சென்று அது அசம்பாவிதம் நடந்த விடக்கூடாது என்பதற்காக வல்லரசுவை வெளியே எடுத்து வந்ததார். ஏன் இங்கே வந்தாய் என்று கேட்டார் தண்ணீர் குடிப்பதற்காக வந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட கைதி வல்லரசு முதன்மை காவலர் செந்தில் கழுத்தை பிடித்து இருக்கிறார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து வார்டன்கள் அவரை மீட்டனர். அவரது கழுத்துப் பகுதியில் விரல் நகம் பதிந்தது இது குறித்து சிறை கண்காணிப்பாளர் வினோத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து விசாரணை நடத்தின உடனடியாக கைதி வல்லரசுவை உறவினர்கள் சந்திக்க மூன்று மாதம் தடை விதித்து உத்தரவிட்டார். சலுகைகள் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்து உத்தரவிட்டார். இது குறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதன்படி அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் வல்லரசு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனி சிறையில் அடைக்கப்பட்டு வல்லரசு தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.