Ramadoss Vs Anbumani: இறுக்கமான முகத்துடன் அன்புமணி... கண்டுகொள்ளாத ராமதாஸ்... மீண்டும் சண்டையா?
மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒருமுறை கூட பேசிக்கொள்ளாதது பாமகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாண்டிச்சேரியில் பாமக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்றது. இதில் பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவகாரம் அரசியல் கட்சி இடையே கடும் பேசும் பொருளாகியது. இந்த நிலையில் இன்றைய தினம் சேலம் மாவட்ட பாமக நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டத்தில் பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் இருவரும் பேசிக்கொள்ளாமல் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தனர். ராமதாஸ் வருகை தந்தபோதும், கூட்ட முடிந்து சென்றபோதும் அன்புமணி பெயரவிலேயே எழுந்து வரவேற்றார். தொடர்ந்து மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒருமுறை கூட பேசிக்கொள்ளாதது பாமகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, பாமக மக்களைப் பற்றி யோசித்து, மக்களுக்காக பாடுபடுகின்ற கட்சி என்றும் கூறினார். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் வாக்கு அதிகம். ஆண்களெல்லாம் மைனாரிட்டி, பெண்களை எல்லாம் மெஜாரிட்டி, பெண்கள் நினைத்தால் மாற்றத்தை கொண்டு வரமுடியும் எந்த மாற்றமுமானாலும் கொண்டு வரமுடியும் என்றார். ஒரு குடும்பத்தில் உள்ள பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் ஒரு பைசா செலவில்லாமல், எல்லாம் செலவையும் அரசு செய்யும் மற்றும் கட்டணமில்லாத படிப்பை செல்வந்தர்களின் பிள்ளைகள், பேரன்கள் படிக்கும் தரமான படிப்பை இங்கு கிடைக்கும் போன்ற திட்டங்களை பாமக வைத்துள்ளது. வறுமை இல்லாமல் விவசாயிகள், நன்றாக வாழ்வது, உலகிலேயே மகிழ்ச்சியான நாடு நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் சொல்லுவார்கள். தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட நிலைமை இருக்கிறதா? என்றால் இல்லை. தமிழ்நாட்டிலும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் போல மக்களும் மகிழ்ச்சியுடன் சிரித்த முகத்துடன் வறுமை ஒழிந்து, பிள்ளைகள் நல்ல கல்வியைப் பெற்று, வேலையைப் பெற்று குடும்பத்தை அக்கறையுடன் கவனிக்கின்ற நிலைமையை நாம் கொண்டுவர முடியும் என்றார்.
"மது உயிருக்கு கேடு, வீட்டுக்கு கேடு", அவ்வாறு "உயிருக்கு கேடு, நாட்டுக்கு கேடு" என்றால் அதை ஏன் விற்கிறது. வருமானம் வரவேண்டும் என்பதற்காக விற்கிறார்கள். வருமானத்திற்கு வழி வரவேண்டும் என்றால் தைலாபுரத்தில் என்னிடம் வந்து கேளுங்கள் வழி சொல்கிறேன். வருமானத்திற்கு மாற்றுவழி குறித்து புத்தகமே போட்டுள்ளோம் தமிழக அரசுக்கு எனவும் பேசினார்.
எல்லாம் மக்களுக்கும் பாமக பாடுபடுகிறது. எல்லாம் சமுதாய மக்களும் எங்களை தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும், ஒரு தாய் மக்களாக நினைத்து பாடுபடுவோம் வஞ்சனை இருக்காது. தாய்மார்கள் நினைத்தால் மாற்றத்தை கொண்டு வர முடியும், ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியும். பெண்களிடம் தான் ஆக்கும் சக்தி, காக்கும் சக்தி, அழிக்கும் சக்தி நீங்கள் நினைத்தால் சாராயம், கஞ்சா உள்ளிட்டவைகளை ஒழிக்க முடியும். சரக்கு என்று சாப்பிட்டு வருவதால், இந்த சமுதாயம் சரிந்து கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு தீர்வு காண உங்களிடம் உள்ள அபரிவிதமான ஓட்டுகளை எங்களுக்கு அளித்தால் சமுதாயத்தை சீர்படுத்தி நலன்களைக் கொண்டு வர முடியும் என்றும் பேசினார்.

