மேலும் அறிய
Advertisement
தருமபுரி: இலவச வீட்டுமனை பட்டாவிற்கான இடம் முறையாக அளவீடு செய்து தரவில்லை - ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்
இலவச வீட்டுமனை பட்டாவிற்கான இடத்தை முறையாக அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என 30க்கும் மேற்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
மாரண்டஹள்ளி அருகே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவிற்கான இடத்தை முறையாக அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என 30க்கும் மேற்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கெண்டையணள்ளி ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரமுட்லு கிராமத்தில் பல்வேறு சமூகத்தைச் சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கிராமமாக இருந்தது. தற்பொழுது வளர்ச்சி அடைந்து குடும்பங்கள் அதிகரித்துள்ளது. ஆனாலும் போதிய இடவசதி இல்லாத காரணத்தால், ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள், மூன்று குடும்பங்கள் என வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அப்பொழுது இந்த சாஸ்திரமுட்லு கிராமத்தில் உள்ள 50 பேருக்கு அரசின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் தனியாக வீடு கட்டுவதற்கும், அரசின் இலவச வீடு வாங்கி கட்டவும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் இலவசமாக வழங்கப்பட்ட பட்டாவிற்கான இடம் இன்னும் தெரியாததால், மேற்கொண்டு வீடுகள் கட்ட முடியாத நிலையில் இருந்து வந்துள்ளனர். இதை தொடர்ந்து பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில், இலவச வீட்டு மனை பட்டாவிற்கான இடத்தை அளவீடு செய்து கொடுக்குமாறு முறையிட்டுள்ளனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வருவாய்த் துறை அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் இருந்து வந்துள்ளனர். இதனால் சாஸ்திரமுட்லு கிராமத்தைச் சார்ந்த 30க்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை முறையாக அளவீடு செய்து கொடுக்க வேண்டும். மேலும் வறுமையில் உள்ள தங்களுக்கு அரசின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்கி, வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு அளித்தனர். மேலும் இந்த இலவச வீட்டுமனை பட்டாவிற்கான இடம் முறையாக அளவீடு செய்து தராததால், தங்களால் சுயமாகவும் வீடு கட்டிக் கொள்ள முடியவில்லை. அதேபோல் அரசின் சார்பில் வழங்கப்படுகின்ற அந்த இலவச வீடு பெற்று கட்ட முடியாத சூழல் இருந்து வருகிறது. எனவே தருமபுரி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சாஸ்திரமுட்லு கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
அரசியல்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion