மேலும் அறிய

Pongal Gift: சேலத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடக்கம் - மக்கள் மகிழ்ச்சி

இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் கூறினர்.

தமிழகம் முழுவதும் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். இந்த பரிசு தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ. 1,000 ரொக்கத்துடன் முழு கரும்பும் சேர்த்து வழங்கப்படுகிறது. சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பொங்கல் பரிசு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 1,606 நியாய விலை கடைகள் மூலம் 10 லட்சத்து 73 ஆயிரத்து 514 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 939 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என மொத்தம் 10 லட்சத்து 74 ஆயிரத்து 453 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு ரூ.118.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் நாள் ஒன்றுக்கு 350 குடும்ப அட்டைதாரர்களுக்கும், கிராமப்புற பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் நாள் ஒன்றுக்கு 250 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் வகையில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் நியாய விலை கடைக்கு நேரில் சென்று, சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொங்கல் பரிசு தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Pongal Gift: சேலத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடக்கம் - மக்கள் மகிழ்ச்சி

அவ்வாறு இன்றைய தினம் பொங்கல் பரிசு தொகுப்பு பெற டோக்கன் பெற்றிருந்த குடும்ப அட்டைதாரர்கள் அந்தந்த நியாய விலை கடைகளில் ரூ. 1,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று செல்கின்றனர். சேலம் எம்டிஎஸ் நகரில் உள்ள நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் கூறினர்.

Pongal Gift: சேலத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடக்கம் - மக்கள் மகிழ்ச்சி

இந்த நிலையில் நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாப்பட்டினம், மின்னாம்பள்ளி மற்றும் காரியப்பட்டி ஆகிய நியாய விலைக்கடைகளில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் நேரடி ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக சேலம் மாவட்டத்திற்குத் தேவையான கரும்புகள் அனைத்தும் சேலம் மாவட்டத்திலிருந்தே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் அதிகமாக கரும்பு பயிரிடப்பட்டுள்ளதால் மற்ற மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்குத் தேவையான கரும்புகளையும் இங்கிருந்து தொடர்புடைய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அலுவலர்கள் குழுவின் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Embed widget