மேலும் அறிய

Mettur Dam: புத்தாண்டில் முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை... இன்றைய நீர் நிலவரம் இதுதான்

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பருவமழை காலம் என்பதால், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால் டெல்டா பாசத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2,701 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 2,516 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 2,331 கன அடியாக குறைந்துள்ளது.

Mettur Dam: புத்தாண்டில் முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை... இன்றைய நீர் நிலவரம் இதுதான்

நீர்மட்டம்:

அணையின் நீர்மட்டம் 119.87 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.26 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது.

கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: புத்தாண்டில் முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை... இன்றைய நீர் நிலவரம் இதுதான்

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4,338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2,150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

தலைப்பு செய்திகள்

அரசு கேபிள் டிவி தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா? ஆபரேட்டர்கள் திடீர் அச்சம்
அரசு கேபிள் டிவி தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா? ஆபரேட்டர்கள் திடீர் அச்சம்
ஒரு மாதத்தில் 26 குடும்பங்களின் நிம்மதி போச்சு! ஹெல்மெட் அணியாவிட்டால் காத்திருக்கும் பேராபத்து!
ஒரு மாதத்தில் 26 குடும்பங்களின் நிம்மதி போச்சு! ஹெல்மெட் அணியாவிட்டால் காத்திருக்கும் பேராபத்து!
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
DMK vs TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
Hyundai Cars Price Hike: ஹூண்டாய் கார் வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; அடுத்த மாதம் விலைகள் உயருது; காரணம் இதுதான்
ஹூண்டாய் கார் வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; அடுத்த மாதம் விலைகள் உயருது; காரணம் இதுதான்
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
Embed widget