மேலும் அறிய

Mettur Dam: குறிப்பிட்ட தேதியில் திறக்கப்படுமா மேட்டூர் அணை? - கவலையில் டெல்டா விவசாயிகள்

கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட வேண்டிய தண்ணீர் திறக்கப்படாததாலும், தென்மேற்கு பருவமழை பொய்யாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

தமிழ்நாடு டெல்டா மாவட்ட விவசாயிகளும் ஜீவ நதியாக விளங்கும் மேட்டூர் அணை கடும் வறட்சியால் காணப்படுகிறது. மேட்டூர் அணையில் மொத்த நீர் இருப்பு 93.47 டி.எம்.சி., நீர்மட்டம் 120 அடி தேக்கி வைக்கும் வகையில் கட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படும். 

89 ஆண்டு நீர் திறப்பு:

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட 1934 ஆம் ஆண்டு தொடங்கி உரிய தேதியான ஜூன் 12 அன்று 18 முறை அணை திறக்கப்பட்டுள்ளது. உரிய தேதிக்கு முன்னதாக 11 முறை திறக்கப்பட்டுள்ளது. காலதாமதமாக 60 ஆண்டுகள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.76 அடியாக இருந்த நிலையில் சுதந்திரத்திற்கு பின்னர் முதன்முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் வேதனை:

மேட்டூர் அணை இன்று காலை நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு 57 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 50.78 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 18.30 டி.எம்.சி ஆகவும் உள்ளது. கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட வேண்டிய தண்ணீர் திறக்கப்படாததாலும், தென்மேற்கு பருவமழை பொய்யாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரியா தொடங்கியது. இதனால் நடப்பு ஆண்டு டெல்டா பாசனத்திற்காக குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதால் தமிழ்நாடு டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பில்லை என்பதால் தமிழ்நாட்டில் உள்ள 12 டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்துள்ள பயிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்து போகும் நிலை ஏற்படும். இதனால், மாவட்ட விவசாயிகள் குருவை சம்பா பயிரிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

Mettur Dam: குறிப்பிட்ட தேதியில் திறக்கப்படுமா மேட்டூர் அணை? - கவலையில் டெல்டா விவசாயிகள்

நீர் நிலுவை:

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகா, ஆண்டு தோறும் ஜூன் முதல் மே வரை தமிழகத்துக்கு, 177.25 டி.எம்.சி., வழங்க வேண்டும். கடந்த, 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், 2.83 டி.எம்.சி., ஜூலை மாதத்தில், 8.74, ஆகஸ்டில், 19.90, செப்டம்பரில், 13.58, அக்டோபரில், 12.84. நவம்பரில், 10.65, டிசம்பரில், 4, பின்னர் 2024 ஜனவரியில், 1.4, பிப்ரவரியில், 0.6, மார்ச்சில், 0.94, ஏப்ரலில், 0.43 என இதுவரை, 75.91 டி.எம்.சி., நீர் மட்டுமே கர்நாடகா மாநிலம் வழங்கியுள்ளது. இன்னும், 101.34 டி.எம்.சி., நீர் நிலுவை வைத்துள்ளது. கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் இருப்பு குடிநீருக்கு மட்டுமே போதுமானதாக இருப்பதாகக் கூறி, தண்ணீர் தர முடியாது என கர்நாடகா மாநில அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

2023 நீர் திறப்பு:

கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக உரிய தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் 16.5 லட்சம் ஏக்கர் வசனம் பெற்றது. நடப்பு ஆண்டில் 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பையொட்டி தமிழக அரசு சார்பில் 4061 கி.மீ தூர்வாரப்பட்டது. 

காவிரி ஆறு:

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக்கடலில் கலக்கிறது. 

தலைப்பு செய்திகள்

இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget