மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர்வரத்து இரண்டாம் நாளாக 575 கன அடியாக நீடிப்பு

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பருவமழை காலம் முடிவடைந்தது, அதன் காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்த வருகிறது. தமிழ்நாடு முழுவதும் குருவை சம்பா சாகுபடி அறுவடைக்கு தயாராக இருப்பதால், டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 425 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 575 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 575 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து இரண்டாம் நாளாக 575 கன அடியாக நீடிப்பு

நீர்மட்டம்:

அணையின் நீர்மட்டம் 109.37 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 77.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணை வரலாற்றில் ஒரே ஆண்டில் மூன்று முறை அணை நிரம்பியது இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெற்றது. மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெற்றது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவை மற்றும் டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது.

கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்ட வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து இரண்டாம் நாளாக 575 கன அடியாக நீடிப்பு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4,338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2,150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதிரடி காட்டிய நீதிமன்றம்; ஆனந்த விகடன் இணையதள முடக்கத்தை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவு!
அதிரடி காட்டிய நீதிமன்றம்; ஆனந்த விகடன் இணையதள முடக்கத்தை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவு!
Ilayaraja on Symphony:
"Incredible இந்தியா மாதிரி நான் Incredible இளையராஜா".! லண்டன் புறப்பட்டபோது அசத்தல் பேட்டி...
NEET UG Registration: அலர்ட் மாணவர்களே… நீட் தேர்வு விண்ணப்பிச்சாச்சா? நாளையே கடைசி- இதோ Guide!
NEET UG Registration: அலர்ட் மாணவர்களே… நீட் தேர்வு விண்ணப்பிச்சாச்சா? நாளையே கடைசி- இதோ Guide!
Anna Nagar Tower Park: புதுப்பொலிவு பெறும் அண்ணா நகர் டவர் பார்க்... யப்பா.. இவ்ளோ வசதிகள் வரப்போகுதா.?
புதுப்பொலிவு பெறும் அண்ணா நகர் டவர் பார்க்... யப்பா.. இவ்ளோ வசதிகள் வரப்போகுதா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Slams Delimitation | ”பல லட்சம் கோடி கடன் புதிய MP-க்கள் அவசியமா?” மோடியை வெளுத்த விஜய்EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடிGovt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’  மாணவிகள் பகீர் புகார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிரடி காட்டிய நீதிமன்றம்; ஆனந்த விகடன் இணையதள முடக்கத்தை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவு!
அதிரடி காட்டிய நீதிமன்றம்; ஆனந்த விகடன் இணையதள முடக்கத்தை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவு!
Ilayaraja on Symphony:
"Incredible இந்தியா மாதிரி நான் Incredible இளையராஜா".! லண்டன் புறப்பட்டபோது அசத்தல் பேட்டி...
NEET UG Registration: அலர்ட் மாணவர்களே… நீட் தேர்வு விண்ணப்பிச்சாச்சா? நாளையே கடைசி- இதோ Guide!
NEET UG Registration: அலர்ட் மாணவர்களே… நீட் தேர்வு விண்ணப்பிச்சாச்சா? நாளையே கடைசி- இதோ Guide!
Anna Nagar Tower Park: புதுப்பொலிவு பெறும் அண்ணா நகர் டவர் பார்க்... யப்பா.. இவ்ளோ வசதிகள் வரப்போகுதா.?
புதுப்பொலிவு பெறும் அண்ணா நகர் டவர் பார்க்... யப்பா.. இவ்ளோ வசதிகள் வரப்போகுதா.?
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
Tigers Death: மூன்று நாட்களில் இரண்டாவது புலி மரணம் - காரணம் என்ன? முதுமலை புலிகள் சரணாலயத்தில் என்ன பிரச்னை?
Tigers Death: மூன்று நாட்களில் இரண்டாவது புலி மரணம் - காரணம் என்ன? முதுமலை புலிகள் சரணாலயத்தில் என்ன பிரச்னை?
Income Tax Rule: ஆப்பு கன்ஃபார்ம், தனிநபர் உரிமைகள் கோவிந்தா..! அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிகள்
Income Tax Rule: ஆப்பு கன்ஃபார்ம், தனிநபர் உரிமைகள் கோவிந்தா..! அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிகள்
Tamilnadu Roundup : செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை செக்? 2026ல் தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup : செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை செக்? 2026ல் தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget