மேலும் அறிய

Mettur Dam: தொடர்ந்து சரிவு... மேட்டூர் அணையின் நீர்வரத்து 2வது நாளாக 381 கன அடியாக நீட்டிப்பு

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 5,300 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பருவமழை காலம் என்பதால், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால் டெல்டா பாசத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 555 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 381 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 381 கன அடியாக குறைந்துள்ளது.

Mettur Dam: தொடர்ந்து சரிவு... மேட்டூர் அணையின் நீர்வரத்து 2வது நாளாக 381 கன அடியாக நீட்டிப்பு

நீர்மட்டம்:

அணையின் நீர்மட்டம் 114.14 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 84.43 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மேட்டூர் அணை வரலாற்றில் ஒரே ஆண்டில் மூன்று முறை அணை நிரம்பியது இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது.

கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 5,300 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: தொடர்ந்து சரிவு... மேட்டூர் அணையின் நீர்வரத்து 2வது நாளாக 381 கன அடியாக நீட்டிப்பு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4,338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2,150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ajithkumar Lockup Death: மிருகமான காவலர்கள் - 50 காயங்கள், சிகரெட் சூடு, கட்டையால் தாக்குதல் - அஜித்குமார் கொடூரக் கொலை
Ajithkumar Lockup Death: மிருகமான காவலர்கள் - 50 காயங்கள், சிகரெட் சூடு, கட்டையால் தாக்குதல் - அஜித்குமார் கொடூரக் கொலை
IND Vs ENG: கோலி சாதனையை தவிடுபொடியாக்கிய கில், பயம் காட்டிய ஆகாஷ் தீப் - தடுமாற்றத்தில் இங்கிலாந்து
IND Vs ENG: கோலி சாதனையை தவிடுபொடியாக்கிய கில், பயம் காட்டிய ஆகாஷ் தீப் - தடுமாற்றத்தில் இங்கிலாந்து
EV vs Petrol Car: தினமும் ஓட்டனும்.. மின்சார காரா? பெட்ரோல் காரா? எது பெஸ்ட்? காரணம் என்ன? செலவு எதில் கம்மி?
EV vs Petrol Car: தினமும் ஓட்டனும்.. மின்சார காரா? பெட்ரோல் காரா? எது பெஸ்ட்? காரணம் என்ன? செலவு எதில் கம்மி?
தங்கத்தை விடுங்க.. குரங்கை கடத்தி இருக்காங்க.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
தங்கத்தை விடுங்க.. குரங்கை கடத்தி இருக்காங்க.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ajithkumar Lockup Death: மிருகமான காவலர்கள் - 50 காயங்கள், சிகரெட் சூடு, கட்டையால் தாக்குதல் - அஜித்குமார் கொடூரக் கொலை
Ajithkumar Lockup Death: மிருகமான காவலர்கள் - 50 காயங்கள், சிகரெட் சூடு, கட்டையால் தாக்குதல் - அஜித்குமார் கொடூரக் கொலை
IND Vs ENG: கோலி சாதனையை தவிடுபொடியாக்கிய கில், பயம் காட்டிய ஆகாஷ் தீப் - தடுமாற்றத்தில் இங்கிலாந்து
IND Vs ENG: கோலி சாதனையை தவிடுபொடியாக்கிய கில், பயம் காட்டிய ஆகாஷ் தீப் - தடுமாற்றத்தில் இங்கிலாந்து
EV vs Petrol Car: தினமும் ஓட்டனும்.. மின்சார காரா? பெட்ரோல் காரா? எது பெஸ்ட்? காரணம் என்ன? செலவு எதில் கம்மி?
EV vs Petrol Car: தினமும் ஓட்டனும்.. மின்சார காரா? பெட்ரோல் காரா? எது பெஸ்ட்? காரணம் என்ன? செலவு எதில் கம்மி?
தங்கத்தை விடுங்க.. குரங்கை கடத்தி இருக்காங்க.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
தங்கத்தை விடுங்க.. குரங்கை கடத்தி இருக்காங்க.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
பள்ளி மாணவிகளை வீடியோ, படம் எடுக்கத்தடை, சிசிடிவி கட்டாயம்- பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு!
பள்ளி மாணவிகளை வீடியோ, படம் எடுக்கத்தடை, சிசிடிவி கட்டாயம்- பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு!
வெளியான 10ஆம் வகுப்பு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்; எங்கே, எப்படி காணலாம்?
வெளியான 10ஆம் வகுப்பு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்; எங்கே, எப்படி காணலாம்?
Ramadoss Vs Anbumani: “அன்புமணிக்கு எந்த அதிகாரமும் கிடையாது“; அக்ரசிவ் மோடில் ராமதாஸ் - அல்லாடும் தொண்டர்கள்.!!
“அன்புமணிக்கு எந்த அதிகாரமும் கிடையாது“; அக்ரசிவ் மோடில் ராமதாஸ் - அல்லாடும் தொண்டர்கள்.!!
TNPSC குரூப் 4 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு! உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு தகவல்!
TNPSC குரூப் 4 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு! உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு தகவல்!
Embed widget