மேலும் அறிய

Mettur dam: மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து 1,711 கனஅடியாக அதிகரிப்பு

குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது, இதனால் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,260 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 1,410 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 1,711 கன அடியாக அதிகரித்துள்ளது. 

Mettur dam: மேட்டூர் அணை நிலவரம்:  நீர்வரத்து  1,711 கனஅடியாக அதிகரிப்பு

அணையின் நீர் மட்டம் 103.19 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 69.03 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 89 வது ஆண்டாக மே 24 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை மே மாதத்தில் திறக்கப்படுவது இதுவே முதல் முறை. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.5 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது நிறுத்தப்பட்டுள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக 6,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் முழுமையாக நிறுத்தப்பட்டது. அணையில் இருந்து உபரி நீர் 2,500 கன அடி 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur dam: மேட்டூர் அணை நிலவரம்:  நீர்வரத்து  1,711 கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 102.98 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 25.23 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 229 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1,077 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 42.93 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 8.06 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 152 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1,050 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
GT Vs KKR, IPL 2024:  பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா குஜராத்? அகமதாபாத்தில் கொல்கத்தா வீழ்த்துமா?
GT Vs KKR, IPL 2024: பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா குஜராத்? அகமதாபாத்தில் கொல்கத்தா வீழ்த்துமா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vetrimaaran on Ilayaraja Vairamuthu : இளையராஜா VS வைரமுத்து “பாடல் யாருக்கு சொந்தம்?”- வெற்றிமாறன்Priyanka Gandhi on Amit shah : ”என்ன பண்ணீங்க அமித்ஷா? லிஸ்ட் சொல்லுங்க பார்ப்போம்” பிரியங்கா சவால்Vetrimaaran Pressmeet : ”சாதி ஏற்றத்தாழ்வு இல்லையா? நீங்கலாம் எங்க வாழ்றீங்க?” வெற்றிமாறன் பதிலடிNellai Jayakumar : மர்மம் விலக்குமா டார்ச் லைட்? ஜெயக்குமார் மரணத்தில் திருப்பம்! வலுக்கும் சந்தேகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
GT Vs KKR, IPL 2024:  பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா குஜராத்? அகமதாபாத்தில் கொல்கத்தா வீழ்த்துமா?
GT Vs KKR, IPL 2024: பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா குஜராத்? அகமதாபாத்தில் கொல்கத்தா வீழ்த்துமா?
Lok Sabha Election 2024 LIVE: ஹைதரபாத்தில் ஓட்டுப் போட்டார் வெங்கையா நாயுடு
Lok Sabha Election 2024 LIVE: ஹைதரபாத்தில் ஓட்டுப் போட்டார் வெங்கையா நாயுடு
KPY Bala: தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வெழுதி வென்ற 12 ஆம் வகுப்பு மாணவி - ரூ.1 லட்சம் வழங்கிய KPY பாலா!
தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வெழுதி வென்ற 12 ஆம் வகுப்பு மாணவி - ரூ.1 லட்சம் வழங்கிய KPY பாலா!
Andhra Assembly Election 2024: ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! ஆட்சி யாருக்கு? ஜெகன் Vs சந்திரபாபு?
Andhra Assembly Election 2024: ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! ஆட்சி யாருக்கு? ஜெகன் Vs சந்திரபாபு?
Sundar C: சுந்தர் சி சொன்ன அந்த வார்த்தை! தனக்கென தனியிடம் பிடித்த சந்தானம் - என்ன நடந்தது?
சுந்தர் சி சொன்ன அந்த வார்த்தை! தனக்கென தனியிடம் பிடித்த சந்தானம் - என்ன நடந்தது?
Embed widget