மேலும் அறிய

நிரம்பிய கர்நாடக அணைகள் - தமிழகத்திற்கு உபரி நீர் வினாடிக்கு 75,641 கன அடியாக நீர்திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் வினாடிக்கு 75,641 கன அடியாக நீர்திறப்பு. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 4 நாட்களுக்கு பிறகு வினாடிக்கு 1,10,000 கன அடியாக குறைந்தது.

கர்நாடக, கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியுள்ளது.  இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு மீண்டும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி கபினி 33,313 கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 77,984 கன அடி என மொத்தம்1,11,297 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
 
இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு கடந்த 4 நாட்களாக நீர்வரத்து வினாடிக்கு 1,20,000 கன அடியாகவே தொடர்ந்து வந்தது. இதனால் ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நடைப்பாதை, மெயினருவி, சினியருவி, ஐந்தருவிகள் உள்ளிட்ட பாறைகள் முழுவதும் மூழ்கி, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைககப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை சற்று குறைந்துள்ளதால், கர்நாடக அணைகளுக்கு வரும் நீர்வரத்தின் அளவு சற்று குறைந்துள்ளது. இதனால் கர்நாடக மாநில அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் உபரிநீரை, அப்படியே காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலைவரப்படி கபினி அணையிலிருந்து வினாடிக்கு 29,844 கன அடியும்ம், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 45,617 கன அடி என இரண்டு அணைகளிலும் சேர்த்து மொத்தம் வினாடிக்கு 75, 641 கன அடியாக, நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
 
நிரம்பிய கர்நாடக அணைகள் - தமிழகத்திற்கு உபரி நீர் வினாடிக்கு 75,641 கன அடியாக நீர்திறப்பு
 
இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 4 நாட்களுக்கு பிறகு நீர்வரத்து, வினாடிக்கு 1,20,000 கன அடியிலிருந்து குறைந்து,  வினாடிக்கு 1,10,000 கன அடியாக சரிந்துள்ளது. மேலும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தொடர்ந்து 10-வது ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கான தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், தண்ணீர் ஒகேனக்கல் வரை தேக்கமடுந்துள்ளது. மேலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருப்பதால், காவிரி கரையோரப் பகுதிகளில் உள்ள ஆலம்பாடி, ஊட்டமலை, ஒகேனக்கல், நாடார்கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய், ஊரக வளர்ச்சி, தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், இன்று மாலை மேலும்  நீர்வரத்து படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget