மேலும் அறிய
Advertisement
தருமபுரி: இடம், வீடு இல்லை! மொத்தம் 12 பேர்! 30 ஆண்டுகளாக இடுகாட்டில் வாழும் குடும்பம்!
இஸ்லாமியர்கள் உயிரிழந்தால் அவர்களை அடக்கம் செய்வது போன்ற பணிகளைச் செய்வதால், அப்பொழுது மட்டும் இவருக்கு சிறு வருமானம் கிடைக்கும் இதனை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறார்
பாப்பிரெட்டிப்பட்டியில் வாழ வழியின்றி 30 ஆண்டுகளாக குழந்தைகளுடன் இஸ்லாமிய குடும்பம் சுடுகாட்டில் வாழ்ந்து வருகிறது
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த இம்ரான்-தாஜூன் தம்பதியினருக்கு இரண்டு 2 மகள் ஒரு மகன் உள்ளனர். இதில் இம்ரான் உடல் நிலை சரியில்லாததால் சிறுசிறு வேலைகளுக்குச் சென்று குடும்பம் நடத்தி வருகிறார். இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி பள்ளி வாசலில் இம்ரானுக்கு இடுகாட்டை பராமரிக்கவும் பணியினை வழங்கியுள்ளனர். மேலும் வீடு வாசல் இல்லாத காரணத்தால் சுடுகாட்டில் உள்ள சிறிய அறையில் இருந்து தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் இஸ்லாமியர்கள் உயிரிழந்தால் அவர்களை அடக்கம் செய்வதற்கு குழிகளை வெட்டி கொடுப்பதும் அடக்கம் செய்வதும் போன்ற பணிகளைச் செய்வதால், அப்பொழுது மட்டும் இவருக்கு சிறு வருமானம் கிடைக்கும் இதனை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறார்.
மகன் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இரண்டு பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். அதில் இளைய மகள் ரஜ்ஜியாவை அரூரை சேர்ந்த ரபீக் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். அவர்கள் குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து வந்துள்ளனர். அப்பொழுது ரஜ்ஜியாவின் கணவர் ரபீக் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், இம்ரானின் மகள் ரஜ்ஜியா தனது தந்தை வீட்டுக்கே பாப்பிரெட்டிப்பட்டி வந்துள்ளார். ராஜ்ஜியாவுக்கு தற்போது 3 மகள்கள் உள்ளனர். மூன்று குழந்தைகளும் அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வருகின்றனர். இம்ரானின் முதல் மகளும் அவருடனே வசித்து வருகிறார். அவருக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆக மொத்தம் ஒரு மகன், இரண்டு மகள்கள், 7 பேரக்குழந்தைகள் என மொத்தம் 12 பேர்.
அந்த சிறியவ்வீட்டில் இம்ரான் தாஜூன் மகன் மற்றும் முதல் மகளின் குழந்தைகள், இரண்டாவது மகள் மற்றும் அவரது குழந்தைகள் என 12 பேர் வசித்து வருகின்றனர்.
இந்த குடும்பத்தினர் போதிய வருமானம் இல்லாத நிலையில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் கடந்த 30 ஆண்டுகளாக இந்த இஸ்லாமியர்களின் சுடுகாட்டில் உள்ள சிறிய அறையில் இம்ரான் குடும்பத்தினர் வசித்து வந்த நிலையில், தற்பொழுது மகள்களின் குடும்பம் என இணைந்து வசித்து வருகின்றனர். இந்த சிறிய வீட்டில் 12 பேர் வசிப்பதற்கு போதிய இடம் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் தமிழக அரசு இம்ரான் மற்றும் மகள் ரஜ்ஜியாவின் குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், வயது முதிர்ந்த இம்ரான் மற்றும் தாயின் தம்பதியினருக்கு அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதரிசனியிடம் கேட்டபோது, பாப்பிரெட்டிப்பட்டியில் இஸ்லாமியர்களின் சுடுகாட்டில் சிறிய அறையில் வசதி இல்லாமல், இஸ்லாமியர் குடும்பத்தினர் வசித்து வருவது குறித்து, எனது பார்வைக்கு தெரிய வந்தது. அதனை உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளேன். தொடர்ந்து அவர்களுக்கு அரசின் சார்பில் இலவச வீடுகள் மற்றும் உதவித்தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion