மேலும் அறிய

சேலம் : எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு அரசுப்பள்ளியில் நிகழ்ந்த மாற்றம்.. தமிழ்வழிக் கல்வியில் சேர்ந்த மாணவி..

பள்ளியில் ஆங்கில வழியில் 401 மாணவ, மாணவியரும். தமிழ் வழியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வருகிறார்.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1893 ஆம் ஆண்டில் தொடங்கிய பள்ளி 123 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 123 ஆண்டுகளாக தமிழ்வழிக் கல்வியும், கடந்த 8 ஆண்டுகளாக ஆங்கில வழிக் கல்வியும் இருந்து வருகிறது. தற்பொழுது, இப்பள்ளியில் 402 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்து வந்த 137 மாணவ, மாணவியரின் பெற்றோர் அருகில் புதிதாக தொடங்கப்பட்ட தனியார் பள்ளியின் ஆங்கில வழிக் கல்வியின் மோகம் காரணமானது தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பதற்கு முடிவெடுத்துள்ளனர்.

அப்போது தலைமையாசிரியர் அரசிடம் கோரிக்கை வைத்து ஏத்தாப்பூர் அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்கியுள்ளர். அதன்பின் தமிழ் வழியில் பயின்று வந்த அனைத்து மாணவர்களும் பெற்றோரின் அறிவுறுத்தலின்படி ஆங்கில வழிக் கல்விக்கு மாறியுள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக தமிழ் வழிக் கல்வியில் சேர்வதற்கு யாரும் முன்வராத நிலையில் தற்போது முதலாம் வகுப்பில் இளவேனில் என்ற மாணவி சேர்ந்துள்ளார். இந்த பள்ளியில் ஆங்கில வழியில் 401 மாணவ, மாணவியரும். தமிழ் வழியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வருகிறார். இளவேனில் தாய் சுபா ஏத்தாப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். 

சேலம் : எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு அரசுப்பள்ளியில் நிகழ்ந்த மாற்றம்.. தமிழ்வழிக் கல்வியில் சேர்ந்த மாணவி..

இதுகுறித்து இளவேனில் தாய் சுபா கூறுகையில், "தங்களது குழந்தையை அரசு பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் சேர்க்க வேண்டும் என்று என் கணவரும் நானும் விரும்பினோம். இதற்கு குடும்பத்தினர் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஏத்தாப்பூர் அரசுப் பள்ளியில் தமிழ் வழி கல்வி இல்லை என்று ஏத்தாப்பூர் பகுதி மக்கள் கூறினார். தலைமையாசிரியர் ஜெயக்குமார் இடம் கேட்டபோது தமிழ்வழிக் கல்வி உள்ளது. ஆனால் எட்டு ஆண்டுகளாக 30க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் ஏத்தாப்பூரில் உள்ளதால் தமிழ் வழியில் தங்களது குழந்தைகளை சேர்ப்பதற்கு யாரும் முன்வரவில்லை என்று கூறியதாக சுபா கூறினார். தங்களது குழந்தை சுயசிந்தனை, கற்பனைத்திறன் அனைவரிடமும் சகஜமாகப் பழக வேண்டும் என்பதால் அரசு பள்ளியில் சேர்த்ததாக கூறினார். அதுமட்டுமின்றி அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது” என கூறினார். 

சேலம் : எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு அரசுப்பள்ளியில் நிகழ்ந்த மாற்றம்.. தமிழ்வழிக் கல்வியில் சேர்ந்த மாணவி..

இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயக்குமார் கூறுகையில், ”தனியார் பள்ளி மோகம் காரணமாக குழந்தைகளை ஆங்கில வழியில் கற்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் தமிழ்வழிக் கல்வியை முழுமையாக மறந்து விட்டனர் என்றும், தங்களது பள்ளியில் தமிழ்வழிக் கல்வி இருந்தபோது 2012 - 2013 ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது பெற்றிருந்தும், பெற்றோர்களின் அறியாமை காரணமாக எட்டு ஆண்டுகளாக தமிழ் வழியில் மாணவர்கள் யாரும் சேரவில்லை என்று கூறினார். இதுமட்டுமின்றி ஏத்தாப்பூர் அரசு பள்ளி 2014 - 2015 ஆம் ஆண்டிற்கான காமராஜர் விருதும் பெற்றுள்ளதாக கூறினார். ஆண்டுதோறும் மாணவரின் சேர்க்கையின் போது ஏத்தாப்பூர் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி பள்ளியின் பெருமைகள் குறித்து கூறியும், தற்பொழுது ஏத்தாப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் தங்களது குழந்தையை எங்கள் பள்ளியில் தமிழ் வழியில் சேர்த்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக” அவர் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget