மேலும் அறிய
Advertisement
கடுமையான பனிப்பொழிவால் சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து
தருமபுரி சுற்று வட்டார பகுதிகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடுமையான பனிப்பொழிவு- சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து.
கார்த்திகை மாதம் தொடங்கிய நாள் முதல் தருமபுரி மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவிவருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காலை 9 மணி வரை பனிப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் தருமபுரி நகர் பகுதியில் இருந்து ஆட்சியர் அலுவலகம் எமக்குட்டியூர், காரயோனி, வெள்ளோலை, ராஜாபேட்டை வழியாக செல்லும் நகர்ப்புற பேருந்து வழக்கம்போல், நேற்று அதிகாலை இயக்கப்பட்டது. அப்பொழுது எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருந்துள்ளது. இந்நிலையில் அரசு பேருந்து ஏமக்குட்டியூர் அருகே வந்த பொழுது, சாலையில் எதிரில் இருசக்கரம் ஒன்று வந்துள்ளது. தொடர்ந்து திடீரென இருசக்கர வாகனம் வந்ததை கண்ட ஓட்டுனர் பேருந்து சாலை விட்டு கீழே இறக்கி உள்ளார். அப்பொழுது முழுமையான பாதைகள் தெரியாததால், சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து இறங்கியது. இதில் பேருந்து ஒரு பக்கமாக சாய்ந்ததால் பேருந்தில் பயணித்த பயணிகள் அலறடித்து சத்தமிட்டனர். ஆனால் பேருந்து சாய்ந்த நிலையில் இருந்ததால், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இயக்கி விட்டனர். தருமபுரி சுற்று வட்டார பகுதிகளில், சாலையில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்ததால், அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது. மேலும் அதிர்ஷ்ட வசமாக பெரும் பாதிப்புகள் ஏற்படவில்லை. அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் சிக்கியதால்,அதிகாலை பூக்களை, விற்பனை செய்ய பூ மார்க்கெட்டிற்கு எடுத்துச் செல்லும் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
தை திருநாளில் சூரியனுக்கு பொங்கல் வைத்து உற்சாகமாகக் கொண்டாடிய தருமபுரி மாவட்ட மக்கள்.
உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழர்கள் அனைவரும் உற்சாகத்துடனும், மண்ணின் மனத்துடனும் இன்று கொண்டாடுகின்றனர். அறுவடைத் திருநாளை முன்னிட்டு, சூரிய பகவானுக்கு, விவசாயிகள் பொங்கலிட்டு வழிபாடு நடத்துகின்றனர்.
தை திங்கள் முதல் நாளில் தை மகளை வரவேற்கும் விதமாக வீடுகளில் வண்ண கோலமிட்டு, தோரணம் கட்டி, கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றுடன் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடுகின்றனர். புத்தாடை அணிந்து பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை வழக்கமான உற்சாகமாகத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபாடு செய்து, கரும்பு, மஞ்சள், புத்தாடை, வாசலில் வண்ணக் கோலங்கள், வீடுகளில் விருந்தினரை வரவேற்கும் தோரணங்கள் என ஒவ்வொரு வீட்டிலும் உழவர் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தருமபுரி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் இன்று காலை புதுப் பானை வைத்து புத்தாடை உடுத்தி பொங்கல் பண்டிகையை உறவினர்கள் மற்றும் குடும்ப நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
பொது அறிவு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion