மேலும் அறிய
Advertisement
தருமபுரி அருகே லாரி மீது கார் மோதி விபத்து - 3 மாணவர்கள் பலியான சோகம்
தீவிர சிகிச்சையில் இருந்த ஜீவபாரதி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தருமபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில், மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர்.
தருமபுரி குமாரசாமி பேட்டை பகுதியைச் சேர்ந்த கவியரசு(21)டிப்ளாமோ படித்து வருவகிறார். கவியரசு தனது உறவினர் ஒருவர் நேற்று இரவு வீட்டிற்கு கார் எடுத்து வந்துள்ளார். அப்போது கார் எடுத்துக் கொண்டு அதனை ஓட்டி சுற்றி பார்க்க நினைத்த கவியரசு அங்கிருந்த சக நண்பர்களான பாடி கிராமத்தைச் சேர்ந்த ராகுல்(22), பத்தாம் வகுப்பு படித்து வந்த சந்தோஷ் (15), ஜீவபாரதி(21), கார்த்திக்(22) ஆகியோரை காரில் ஏற்றிக் கொண்டு, கிருஷ்ணகிரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர்.
அப்பொழுது நண்பர்களை சவாரி அழைத்து சென்று கவியரசு காரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது சவுலூர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது, கட்டுப்பாட்டை இழந்து கார் சேலத்திலிருந்து பெங்களூர் நோக்கி முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் ராகுல், சந்தோஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் தீவிர சிகிச்சையில் இருந்த ஜீவபாரதி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கவியரசு, கார்த்திக் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தருமபுரி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி குமாரசாமிபேட்டையை பகுதி சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் தருமபுரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 14,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து 9,500 கன அடியாக குறைந்தது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வந்த தொடர் கனமழையால் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 இலட்சம் கன அடி வரை நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் மழை முற்றிலும் குறைந்ததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்துள்ளது. மேலும் கர்நாடக மாநில கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், நீர்வரத்து அதிகரித்தது. தற்போது மழை குறைந்ததால் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 14,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று குறைந்து வினாடிக்கு 9,500 கன அடியாக சரிந்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக அணைகளில் நீர்திறப்பு குறைக்கப்பட்டால், கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து வருவதால் காவிரி ஆற்றில் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion