மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
சித்ரா பவுர்ணமியையொட்டி கருப்புசாமி கோயிலில் கத்தி மீது ஏறி அருள் வாக்கு சொன்ன பூசாரி
கோயில் பூசாரி சிவப்பிரியன் கத்தி மீது ஏறி நின்று சுருட்டு பிடித்துக் கொண்டு பொதுமக்களுக்கு அருள் வாக்கு கூறினார். அப்போது அங்கு பொதுமக்களுக்கு கைப்பிடி காசு வழங்கப்பட்டது
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த வெள்ளாளன் கொட்டாய் பகுதியில் கருப்புகோட்டை கருப்பு சாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆடி அமாவாசை மற்றும் சித்திரை பவுர்ணமி அன்று வெகு சிறப்பாக கருப்புசாமிக்கு மது சுருட்டு வைத்து கத்தி மீது ஏரி கோயில் பூசாரி பொதுமக்களுக்கு அருள் வாக்கு சொல்லுவார். அதே போல் இன்று கருப்புசாமி கோயிலில் சித்திரா பவுர்ணமியையொட்டி திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து கருப்புசாமிக்கு மதுபாட்டில்கள், சுருட்டு வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்த திருவிழாவில் அருள் வந்து ஆடிய, கோயில் பூசாரி சிவப்பிரியன் கத்தி மீது ஏறி நின்று சுருட்டு பிடித்துக் கொண்டு பொதுமக்களுக்கு அருள் வாக்கு கூறினார். அப்போது அங்கு பொதுமக்களுக்கு கைப்பிடி காசு வழங்கப்பட்டது. அந்த காசை வீட்டில் வைத்தால், தொழில் செழிக்கும் நினைத்தது நடக்கும் என நம்பப்படுவதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பிடிக்காசு வாங்கவும் வாக்கு கேட்கவும் வந்திருந்தனர். மேலும் கத்தி மீது ஏறி நின்று கோயிலை வந்த கோயில் பூசாரி அருள் வாக்கு சொன்னார். இந்த திருவிழாவுக்கு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான மக்கள் சாமா தரிசனம் செய்து, வழிபட்டனர்.
அரூர் அருகே 1350 மாணவர்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய செந்தில் குமார் எம்.பி
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள தனியார் கிரானைட் நிறுவனம் தலைவர் முத்து ராமசாமி ஆண்டுதோறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இன்று அரூர் பகுதியில் உள்ள பொன்னேரி, எல்லப்புடையாம்பட்டி, கெலாப்பாறை, தாதம்பட்டி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட ஐந்து அரசு பள்ளிகளை சேர்ந்த 1350 மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பை, தமிழகராதி, ஜியோமெட்ரி பாக்ஸ், எழுதுகோல், அளவுகோல், நோட்டு, புத்தகம் மற்றும் பள்ளிகளுக்கு பீரோ, மாணவர்கள் அமருவதற்கான டேபிள் என 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் முத்தையன், அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் பெனசீர் பாத்திமா உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
பொழுதுபோக்கு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion