மேலும் அறிய
Advertisement
பள்ளி மாணவிகளை கேலி செய்த போதை இளைஞர்கள் - திடீர் ரெய்டு விட்ட போலீசாரால் பரபரப்பு
பள்ளி பகுதிக்கு குடிபோதையில் வரும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த மாம்பாடி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும், மாணவ, மாணவி காலையில் பள்ளிக்கு வருவதும், மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து செல்கின்றனர். அப்பொழுது தினசரி மாணவிகள் பள்ளிக்கு வரும் நேரம் மற்றும் மாலை நேரங்களில், இளைஞர்கள் குடிபோதையில், மாணவிகளை கேலி கிண்டல் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அலுவலகத்திற்கு கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நல பிரிவு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் பொத்மக்களை போல, பள்ளி அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்பொழுது ன ஒருவர் மது போதையில் கையில் கோன் ஐஸ்கிரீமை வைத்துக் கொண்டு மாணவிகளை கேலி கிண்டல் செய்துள்ளார். அப்போது காவல் துறையினர் அந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அந்த இளைஞர் காட்பாடி கிராமத்தைச் சேர்ந்த அரவிந்தன் எனவும், தன்னுடைய தம்பியை அழைத்து வந்தேன் என பொய்யாக காவலர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ஆத்திரமடைந்த காவல் துறையினர் அந்த இளைஞரை அரூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இளைஞர்கள் எடுத்து வந்த வண்டியில் ஏதேனும் போதைப் பொருள் இருக்கிறதா என சோதனை செய்தனர். அப்போது தினமும் பள்ளிக்கு வரும், மாணவிகளை இளைஞர்கள் தேவையில்லாமல் தொடர்ந்து கேலி கிண்டல் செய்து வருகின்றனர். பள்ளி பகுதிக்கு குடிபோதையில் வரும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் காவல் துறையினரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து அரசு பள்ளி அருகில் இருந்த இளைஞர்களை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
ஆப்ரேஷன் 2.O தொடரும் கஞ்சா வேட்டை - அரூர் அருகே 2 கிலோ கஞ்சாவை பதுக்கிய 2 பேர் கைது
ஆப்ரேஷன் 2.O - தமிழகத்தில் ஒரு மாதம் அதிரடியாக கஞ்சா வேட்டையில் காவலர்கள் ஈடுபட வேண்டுமென டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர. இந்நிலையில் அரூர் உட்கோட்ட பகுதியில் காவல் துறையினர் தீவர கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர். அப்பேது கூடலூர் அடுத்த பாளையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில், சுற்றி திரிந்த பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை, பாவக்கல் அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த வேடியப்பன் ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர். அப்பொழுது கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.20,000 மதிப்புள்ள 2.200 கிலோ கிராம் கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து இருவரையும் அரூர் சிறைச்சாலையில் அடைத்தனர்.
இதேப்போல் பாப்பிரெட்டிபட்டி அடுத்த கோம்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கோபால் என்பவரை காவல் துறையினர் கைது செய்து, 100 கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதால், இதற்கு அடிமையான இளைஞர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவர்களின் இந்த அதிரடி உத்தரவால் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வோரை காவலர்கள் கண்டுபிடித்து கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion