மேலும் அறிய
Advertisement
மாஸ்டர் பட பாணியில் சிறுவர்களை பயன்படுத்தி கொலை செய்தவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு
’’காந்திமதியை அவரது கள்ளக்காதலன் அரவிந்த் என்கிற வீரமணி (23), அவரது நண்பர்கள் 19 வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், 16 வயது சிறுவன் ஆகிய 4 பேர் கொன்றனர்’’
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்த கிருஷ்ணன் (30). இவருடைய மனைவி காந்திமதி (27), கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி இரவு கிருஷ்ணன் தனது கூட்டாளிகள் 9 பேருடன் சென்று சுப்புராயலுநகர் பூந்தோட்ட சாலையை சேர்ந்த பிரபல ரவுடி வீரா என்கிற வீராங்கன் என்பவரின் தலையை துண்டித்து கொலை செய்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கிருஷ்ணன் உள்பட 5 பேரை கெடிலம் பகுதியில் புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான காவல் துறையினர் பிடித்தனர். பின்னர் கிருஷ்ணனை மட்டும் காவல் துறையினர் அழைத்து கொண்டு மற்ற குற்றவாளிகளை தேட சென்றனர். அப்போது துணை ஆய்வாளர் தீபனின் கழுத்தை கிருஷ்ணன் அறுக்க முயன்ற போது அவர் தனது துப்பாக்கியால் கிருஷ்ணனை சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 22 ஆம் காந்திமதி அங்குள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவரை வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் சீனுவாசன் நகரில் இறக்கி விட்டார். பின்னர் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து காந்திமதியை சரமாரியாக கத்தியால் வெட்டியும், குத்தியும் கொலை செய்தனர்.
இது பற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் காவல்துைறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்காதல் தகராறில் காந்திமதியை அவரது கள்ளக்காதலன் உள்பட 4 பேர் வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் 4 பேரையும் காவல்துைறையினர் பிடித்து நடத்திய விசாரணையில் காந்திமதியின் கள்ளக்காதலன் குப்பங்குளத்தை சேர்ந்த அரவிந்த் என்கிற வீரமணி (23), அவரது நண்பர்கள் 19 வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், 16 வயது சிறுவன் ஆகிய 4 பேர் என்பது தெரிந்தது. கிருஷ்ணனை காவல்துைறையினர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்ற பிறகு அவரது நண்பரான குப்பங்குளத்தை சேர்ந்த வீரப்பன் மகன் அரவிந்த் என்கிற வீரமணி (23) என்பவருடன் காந்திமதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது.
இதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு காந்திமதியை 16 வயது சிறுவன் சுப்புராயலுநகர் சீனுவாசன்நகரில் இறக்கி விட்டார். பின்னர் 4 பேரும் சேர்ந்து காந்திமதியை கத்தியால் வெட்டியும், குத்தியும் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் காவல்துைறையினர் கைது செய்தனர். இதில் அரவிந்த் மட்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற 3 பேரும் சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கைதான அரவிந்தனின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் அரவிந்தனை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்தனை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் அவரிடம் வழங்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
காஞ்சிபுரம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion