மேலும் அறிய
Advertisement
பிஸ்லரி குடிநீர் பாட்டிலில் கொசு இறந்து கிடந்ததால் அதிர்ச்சி - நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு
இந்த தரமற்ற தண்ணீரை வினியோகித்த பிஸ்லரி வாட்டர் கம்பெனி மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதாக செந்தில்ராஜா தெரிவித்துள்ளார்.
தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்களது சொந்த வேலைக்காக சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை பெங்களூரு மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வந்து செல்கின்றர். மேலும் தமிழகம் முழுவதும் கோடைக்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளதால் பேருந்து நிலையங்களில் நீர், மோர், தர்பூசணி, இளநீர், வெள்ளரிகாய், குளிர்பானங்கள் உள்ளிட்டவை தாகத்தை தணிக்கும் வகையில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தருமபுரியை சேர்ந்த செந்தில்ராஜா என்பவர் சேலம் செல்வதற்காக தருமபுரி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அதனையடுத்து தண்ணீர் குடிப்பதற்காக அவர் அருகே இருந்த கடையில் பிஸ்லரி வாட்டர் பாட்டில் ஒன்று வாங்கிள்ளார். அந்த வாட்டர் பாட்டிலின் உள்ளே தண்ணீரில் கொசு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார். நல்ல குடிநீர் வேண்டும் என்பதால், அதிகளவில் மக்கள் இந்த பிஸ்லரி வாட்டர் பாட்டிலை தான் வாங்கி குடிப்பார்கள். ஏனேனில் மிகபெரிய கம்பெனி என்பதால் சுத்தமாவும், சுகாதாரம் மற்றும் தரமாகவும் இருக்கும் என்பதை நம்பி வாங்கி குடிக்கின்றனர்.
ஆனால் கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக இந்த பிரபல பிஸ்லரி வாட்டர் பாட்டில் வாங்கி குடித்து வருகின்றனர். ஆனால் தற்போது இந்த வாட்டர் பாட்டிலை வாங்கி பார்த்த போது பாட்டிலின் உள்ளே கொசு இறந்து கிடக்கிறது. இதனை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த தரமற்ற தண்ணீரை வினியோகித்த பிஸ்லரி வாட்டர் கம்பெனி மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதாக செந்தில்ராஜா தெரிவித்துள்ளார். மேலும் குடிநீரின் தரம் குறித்து, உரிய அரசு துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion